இரத்த சோகையை போக்க--இரும்புச்சத்து உள்ள உணவு வகைகள் என்ன? எது?

இரத்த சோகையை போக்க--இரும்புச்சத்து உள்ள உணவு வகைகள் என்ன? எது? கீரைகள்/கீரைத் தண்டுகள்: முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை,...

இரத்த சோகையை போக்க--இரும்புச்சத்து உள்ள உணவு வகைகள் என்ன? எது? கீரைகள்/கீரைத் தண்டுகள்: முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை, துளசிக்கீரை, மணத்தக்காளிக்கீரை, காலிபிளவர். காய்: பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழைக்காய், பீன்ஸ். கனிகள்: சீதாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளம்பழம், தர்பூசணி, சப்போட்டா, பேரீட்சை, உலர்ந்த திராட்சை. தானியங்கள் மற்றும் பருப்பு: கம்பு, கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, சாமை, பொட்டுக்கடலை சோயாபீன்ஸ், பட்டாணி. அசைவ உணவு: ஆட்டுக்கறி, ஈரல், முட்டை, மீன், இறால் திரவ உணவு: பொட்டுக்கடலை கஞ்சி, கேழ்வரகுக் கஞ்சி. பிற உணவு வகைகள்: வெல்லம் அதிரசம் கடலை மிட்டாய் கடலை உருண்டை (வெல்லம் கலந்தது) பனங்கற்கண்டு கலந்த பால் கருப்பட்டி மற்றும் கேழ்வரகு மாவு பொரி உருண்டை பொட்டுக்கடலைப் பாயசம் பேரீச்சம் பழம் பொரிவிளங்காய் உருண்டை (அரிசி/கடலை/வெல்லம் கலந்தது) வைட்டமின் "சி" இரும்புச்சத்தை கிரகிக்க வைக்கும் ஓர் ஊக்குவிக்கி ஆகும். அதுபோலவே, உணவு அருந்திய உடனோ, அல்லது ஒரு மணி நேரத்திற்குள்ளோ தேநீர், காபி அருந்துவது கூடாது. அது உடம்பில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைக் குறைக்கும். 1. முயல், ஆடு இவற்றின் ஈரல்கள் - லேசாக சமைக்கப்பட்டவை சோகையை போக்கும். 2. பழரசங்கள், இனிப்பு சுவையுள்ள மாம்பழங்கள், பால், மாமிச சூப், பச்சை காய்கறிகள், கீரைகள் - இந்த உணவுகள் சோகையை போக்கும். முருங்கை கீரை, இரும்புசத்து நிறைந்தவை. எனவே வாரம் ஒரு முறை முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளவும். 3. பீட்ரூட்டில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இரத்த சிகப்பு அணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், இளவயது யுவதிகளுக்கு பீட்ரூட் சாறு சோகையை குறைக்கும். 4. சமைத்த வெந்தயக்கீரை லெட்டூஸ் கீரை அனீமியாவை போக்கும். 5. எல்லா கீரைகளும் இரும்புச்சத்து செறிந்தவை அதுவும் பசலைக் கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. 6. பாதாம் பருப்பில் இரும்பு, வைட்டமின்கள் மட்டும் இல்லாமல், செம்பும் இருக்கிறது. செம்பு ஹேமோகுளோபின் உற்பத்தியை ஊக்குவிக்கும். ஏழு பாதாம் பருப்புக்களை வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, பின் தோல்களை உரித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து அந்த கூழ் பசையை தினமும் காலையில் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வரவும். 7. கறுப்பு எள் இரும்புச்சத்து நிறைந்தது. இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்த பாலுடன் அருந்தவும். 8. தேன் அயச்சத்து நிறைந்தது. சோகைக்கு மருந்து. 9. பூசணிக்காய் இரத்த இழப்பு, சிறுநீரில் ரத்தம் போதல் இவற்றை கண்டிக்கும். எனவே சோகை வராமல் தடுக்கப்படுகிறது. 10. வெங்காயமும் சோகைக்கு மருந்தாகும். 11. பேரிச்சம்பழம், வெல்லம் இவைகள் சோகையை போக்கும். ஆயுர்வேத மூலிகைகள் 1. நெல்லிக்காய் - 'அமிருதம்' எனப்படும் வைட்டமின் சி நிறைந்தது. இதனால் உடல் இரும்புச்சத்தை கிரகிப்பது சுலபமாகிறது. தவிர நெல்லிக்காய் இரத்த சிகப்பு அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. உலர்ந்த நெல்லிக்காய் சோகைக்கு நல்ல மருந்து ரத்தத்தில் ஹேமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும். 2. திராட்சை - குளிர்ச்சி, உடல் பலவீனத்தை போக்கும். ரத்தத்தை பெருக்கும். 3. அஸ்வகந்தா - அமுக்கிராகிழங்கு) - டானிக், நரம்புகளை பலப்படுத்தும். ஆண்மை பெருக்கி, உடல் பலத்தை அதிகரிக்கும். 4. நிலத்துத்தி - பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் வெள்ளைபடுதல் இவற்றை போக்கும். 5. சதவாரி - தண்ணீர் விட்டான்) - பசியை தூண்டும். டானிக் உடல் சக்தியை வளர்க்கும். மூளைக்கும் நல்ல டானிக் சத்துக்கள் நிறைந்தது. 6. அசோகா - குருதிப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் சமயங்களில் அதிக உதிரபோக்கு ஏற்பட்டால் அசோகம் அதை நிறுத்தும். 7. பூனைக்காலி - உதிரப்போக்கை நிறுத்தும். ஆண்மையை பெருக்கும். நரம்பு டானிக். 8. நீர்முள்ளி - சிறுநீர் பெருக்கி, உடல் சோர்வை போக்கி உடல் ஊட்டத்தை உண்டாக்கும். 9. முக்கரட்டை - குளிர்ச்சி, சோகைக்கு மருந்து. முக்கிய எச்சரிக்கை 1. இரும்புச்சத்து, டானிக்காகவோ இல்லை உணவுகளின் மூலம் எடுத்துக் கொள்ளும் போது, கூடவே வைட்டமின் ‘சி’ யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் ‘சி’ இரும்புச்சத்தை கிரகிக்க, சூரணம் செய்ய உதவும். 2. அதிக அயச்சத்து ஆபத்து. எனவே அதிகமாக இரும்பு டானிக்குகளை உபயோகிக்க வேண்டாம். கல்லீரல் பாதிக்கப்படும். மலச்சிக்கல், வயிற்றுவலி, தலை வலி இவை உண்டாகலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி, தேவையான அளவு இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ளவும்.

Related

மருத்துவ டிப்ஸ் 2446845093389373983

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item