பள பள அழகு தரும் பப்பாளி! அழகு குறிப்பு

அழகு குறிப்பு பள பள அழகு தரும் பப்பாளி! பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமர...

அழகு குறிப்பு பள பள அழகு தரும் பப்பாளி! பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. * முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! 1. பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். 2. இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும். 3. சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும். மென்மை கொஞ்சம் கூட இருக்காது. இதனால் சருமம் அழகற்றதாக மாறிவிடும். 4. இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு. * எப்படி என்கிறீர்களா? பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், வெகு சீக்கிரமே முகம் மென்மையானதாக மாறி விடும. *** கருவளையமா? ஒரு சில பெண்களின் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட கருவளையம், மற்றும் கன்னத்தில் கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை தோன்றிய பகுதிகளை மாற்றி இயற்கை அழகை மெருகூட்டி வருகிறது. *** இதற்கு என்ன செய்ய வேண்டும்? சோற்றுக்கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன் பப்பாளி கூழ்- ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்தில் இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து, இது நன்றாக காய்ந்ததும் தண்ணீரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை இப்படி செய்து பாருங்கள். கருப்பு மாயமாகி இருப்பதை காண்பீர்கள். *** சிவப்பழகு வேண்டுமா? பெரும்பாலான பெண்கள் சிவப்பழகைத்தான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டியது இதுதான்... கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும். *** வெண்பிஞ்சு பாதங்கள்! பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும். * டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள். * இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள். * அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்: தேங்காய்க் கீற்று - 2 வெள்ளைமிளகு - 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

Related

மருத்துவ டிப்ஸ் 6121736313243562223

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item