கதம்பகார குழம்பு--சமையல் குறிப்பு
கதம்பகார குழம்பு தேவையான பொருட்கள் துவரம்பருப்பு -1 டேபிள் ஸ்பூன் தனியா -1 டேபிள் ஸ்பூன் மிளகு -1 டீஸ்பூன் வெங்காயம் -100 கி தக்கா...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_2834.html
கதம்பகார குழம்பு
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
தனியா -1 டேபிள் ஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
வெங்காயம் -100 கி
தக்காளி -100 கி
பூண்டு -6 பற்கள்
புளி -லெமன் அளவு
மஞ்சள் தூள் -1 /2 டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்
சீரகம், வெந்தயம், சுக்குப்பொடி, கடுகு தலா 1 ஸ்பூன் இவற்றை வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
செய்முறை
வெங்காயம், தக்காளி, ஆறு பூண்டு பற்கள் ஆகியவற்றை கடுகு தாளிப்பு செய்து வதக்கி கொள்ளவும். புளிக்கரைசலில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்தது வதக்கியவற்றை போட்டு குழம்பை கொதிக்கவிடவும். நன்றாக கொதித்தவுடன் பொடி செய்ததை போட்டு கறிவேப்பிலை சேர்த்து திக்காக இறக்கவும். சுவையான கதம்பகார குழம்பு ரெடி. தோசைக்கும், சாதத்துக்கும் தொட்டு கொள்ள ஏற்றது. தயிர் சாதத்துக்கும் சூப்பராக இருக்கும்.
Post a Comment