சிக்கன் 65(தந்தூரி)--சமையல் குறிப்பு
சிக்கன் 65(தந்தூரி) சிக்கன்-1/2 கிலோ, உப்பு-தேவையான அளவு, கரம் மசாலா-1டீஸ்பூன், மிளகாய் தூள்-2 டீஸ்பூன், மஞ்சள் பொடி-1டீஸ்பூன், தனி...
https://pettagum.blogspot.com/2011/08/65.html
சிக்கன் 65(தந்தூரி)
சிக்கன்-1/2 கிலோ, உப்பு-தேவையான அளவு, கரம் மசாலா-1டீஸ்பூன், மிளகாய் தூள்-2 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி-1டீஸ்பூன், தனியாப் பொடி-2 டீஸ்பூன்,
தயிர்-2 கப், தந்தூரி மசாலா-1டீஸ்பூன், லெமொன் கலர்-1 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 10 பல்
இந்த இரண்டையும் விழுதாக அரைக்கவும்.
செய்முறை
சிக்கனைத் துண்டுகளாக்கி வைக்கவும். உப்பு, மஞ்சள் பொடி எல்லாவற்றையும் சேர்த்து தயிருடன் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்துப் பின் சிக்கன் துண்டுகளையும் போட்டு சில மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஒரு நான்ஸ்டிக் பேன் அல்லது தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிப் பின் சிறிதளவு ரோஸ்ட் ஆன பின்
1) தந்தூரி ஓவன் அல்லது சாதாரண ஓவனில்வைத்து பொன்னிறமாக வரும் வரை பேக் செய்யவும்.
பரிமாறும் முறை
பின் ஒரு கனமான ஸ்டிக்கில் குத்தி, தக்காளி, குடை மிளகாய் இவற்றை மாறி மாறி குத்திப் பரிமாறவும்.
Post a Comment