சமையல் குறிப்புகள்! நவரத்தின காய்கனி சாலட்
நவரத்தின காய்கனி சாலட் தேவையான பொருட்கள் கேரட் - 1 வெங்காயம் - 1 தக்காளி - 1 வெள்ளரிப் பிஞ்சு - 1 எலுமிச்சம் பழம் - 1 பப்பாளி - 8 துண்டுக...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_5230.html
நவரத்தின காய்கனி சாலட்
தேவையான பொருட்கள்
கேரட் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
வெள்ளரிப் பிஞ்சு - 1
எலுமிச்சம் பழம் - 1
பப்பாளி - 8 துண்டுகள்
ஆப்பிள் - 8 துண்டுகள்
வாழைப்பழம் - 8 துண்டுகள்
மாதுளை முத்துக்கள் - 1 டீஸ்பூன்
வெள்ளைச் சென்னா, கடலை, காராமணி
(ஊறவைத்து வேக வைத்தது) - 4 டேபிள் ஸ்பூன்
முளைகட்டிய பச்சைப்பயறு - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கறுப்பு மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
* வெங்காயம், தக்காளி, வெள்ளரிப் பிஞ்சை பொடிப்பொடியாக நறுக்கவும்.
* கேரட்டை துருவிக் கொள்ளவும்.
* எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து, அதில் அனைத்துப் பழத்துண்டுகள், நறுக்கிய காய்கள், துருவிய கேரட், வேக வைத்த தானியங்கள், முளைவிட்ட பயறு, உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலாத் தூள் சேர்த்து நன்கு குலுக்கி கலக்கவும்.
* காய்கனி தானிய சாலட் பரிமாற தயார்.
குறிப்பு
* சாட் மசாலாத் தூள், ரெடியாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.
* தானிய வகைகளை ஊறவைத்து பிரஷர் குக்கரில் வேக வைத்து உபயோகிக்கவும்.
* பயிறைத் தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்து, ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிட்டு துணி காய்ந்த நேரங்களில் தண்ணீர் தெளித்தால் 20 மணி நேரத்தில் முளைகட்டிவிடும்.
***********************************************************************
Post a Comment