ஸ்பெஷல் மட்டன் பிரியாணி--சமையல் குறிப்பு
ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 கிலோ அரிசி - 1/2 கிலோ தயிர் - 1 கப் மிளகாய்த்தூள், தனியாத்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_4017.html
ஸ்பெஷல் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
அரிசி - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம், தக்காளி - 200 கிராம்
புதினா இலை - 1/2 கட்டு
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
செய்முறை
* மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
* அரிசியை வேகவைத்து வடித்துக் கொள்ளவும். கொதிக்கும் சமயம் இரண்டு ஏலக்காயை உரித்துப் போடவும்.
* வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா இலை, பச்சை மிளகாய், தயிர் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
* இதனுடன் மட்டன், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றவும்.
* மட்டன் வெந்த பிறகு, சாதத்தின் மேல் மட்டன் மசாலா கலவை ஒரு லேயர் போடவும். பிறகு சாதம், மட்டன் மசாலா கலவை, இப்படி சேர்த்து மேலே தம் கட்டி 20-லிருந்து 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
* அதன்பிறகு எடுத்து கிளறினால், சாதம் பொலபொலவென்று உதிரியாக இருக்கும். பிரியாணி ரெடி.
******************************************************************
Post a Comment