செட்டிநாடு உணவு-திரக்கல்
திரக்கல் தேவையான பொருட்கள் கத்தரிக்காய் - 2 பிஞ்சு முருங்கைக்காய் - 1 உருளைக்கிழங்கு - 1 பெரிய வெங்காயம் - 2 உப்பு - ருசிக்கேற்ப அரைக்க தேங...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_3585.html
திரக்கல்
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 2
பிஞ்சு முருங்கைக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 2
உப்பு - ருசிக்கேற்ப
அரைக்க
தேங்காய் - 1 மூடி
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் (அ) பச்சை மிளகாய் - 5
தாளிக்க
மிளகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு இருப்புச் சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ‘ஸிம்’மில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் முதலில் கசகசா, சோம்பு, சீரகத்தைப் பொரியவிட்டு, பிறகு தேங்காய், பொட்டுக் கடலையைக் கொட்டி வதக்கி, மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
காய்கறிகளை நீளமான துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும்.
சட்டியில் மீண்டும் எண்ணெய் காயவிட்டு, மிளகு போட்டு வெடிக்கவிட்டு, கறிவேப்பிலை போட்டு நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கி கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும். கடைசியாக முருங்கைக்காயையும் போட்டு வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். காய் வெந்ததும், அரைத்ததைக் கரைத்து ஊற்றி, இரண்டு கொதி வந்ததும், உப்பு சேர்த்து இறக்கவும்.
குறிப்பு
உப்பை முதலிலேயே போட்டுவிட்டால் கடுத்து விடும். குக்கரில் வைப்பதென்றால் காய்களை வதக்கிவிட்டு, அரைத்த மசாலாவை தேவையான தண்ணீரில் கரைத்து ஊற்றி, 2 விசில் வரும் வரை வைத்து எடுங்கள்.
இதே திரக்கலை, கேரட், பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பட்டர்பீன்ஸ் ஆகியவற்றை வதக்கியும் செய்யலாம்.
சப்பாத்தி, இட்லி, தோசைக்கு சரியான காம்பினேஷன் இது.
------------------------------------------------------------------
Post a Comment