சமையல் குறிப்புகள்! முருங்கைச் சாறு
முருங்கைச் சாறு தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் - 4, இஞ்சி - 50 கிராம், பூண்டு - 50 கிராம், மிளகு - 25 கிராம், சீரகம் - 20 கிராம், பச்சை...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_2186.html
முருங்கைச் சாறு
தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் - 4, இஞ்சி - 50 கிராம், பூண்டு - 50 கிராம், மிளகு - 25 கிராம், சீரகம் - 20 கிராம், பச்சைமிளகாய் - 20 கிராம், பயத்தம் பருப்பு - 100 கிராம், கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் ரீஃபைண்ட் ஆயிலை விட்டு, காய்ந்ததும் சீரகம், மிளகு, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியைச் சேர்க்க வேண்டும். பிறகு, இஞ்சி மற்றும் பூண்டை தட்டி அதில் சேர்த்து, நன்றாக சிவக்கும் வரை வதக்க வேண்டும். அலசி சுத்தம் செய்து வடிகட்டிய பயத்தம் பருப்பையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, பெரிய துண்டுகளாக வெட்டப்பட்ட முருங்கைக்காய் மற்றும் உப்புச் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். வெந்ததும், முருங்கைக்காயின் சதைப் பகுதியை அதில் பிழிந்துவிட்டு, சக்கையை எறிந்து விட்டால்.. முருங்கைச் சாறு தயார்!
-------------------------------------------------------------
Post a Comment