செட்டிநாடு உணவு-வெங்காயக் கோஸ்
வெங்காயக் கோஸ் தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் - 2 நாட்டுத் தக்காளி - 2 உருளைக்கிழங்கு - 1 உப்பு - தேவையான அளவு அரைக்க தேங்காய் - 1/4 மூட...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_14.html
வெங்காயக் கோஸ்
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 2
உருளைக்கிழங்கு - 1
உப்பு - தேவையான அளவு
அரைக்க
தேங்காய் - 1/4 மூடி
சோம்பு - 11/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
செய்முறை
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை மிகவும் சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுக்கவும்.
இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளியைக் கொட்டி வதக்கவும். சிறிது வதங்கியதும் உருளைக்கிழங்கையும் கொட்டி நன்கு வதக்கவும்.
எல்லாம் சேர்த்து நன்கு வதங்கியதும், அரைத்து வைத்திருக்கும் கலவையைக் கரைத்து ஊற்றி இரண்டு கொதி கொதித்ததும் கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும்.
-------------------------------------------------
Post a Comment