கைமணம் கோகோ கேக்... ஓஹோ !
மைதா கோகோ கேக் தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், சர்க்கரை - 150 கிராம், வெண்ணெய் - 50 கிராம், சோயா மாவு - 50 கிராம், பால் பவுடர் - 150 கி...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_1167.html
மைதா கோகோ கேக்
தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், சர்க்கரை - 150 கிராம், வெண்ணெய் - 50 கிராம், சோயா மாவு - 50 கிராம், பால் பவுடர் - 150 கிராம், கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் பாதியளவு வெண்ணெய் விட்டு மைதா மாவு, சோயா மாவு இரண்டையும் பச்சை வாசனை போக வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சர்க்கரையைச் சேர்க்கவும். அதில் மைதா மாவு, சோயா மாவு மீதமுள்ள வெண்ணெய் மூன்றையும் ஒன்றாகக் கலந்து சேர்த்துக் கிளறவும். சீராகக் கிளறினால், கெட்டியான பாகு பதத்தில் திரண்டு வரும். அப்போது பால் பவுடர், ரோஸ் எஸன்ஸ், கோகோ பவுடர் சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளறி இறக்கவும். ஒரு தட்டில் சிறிதளவு நெய் தடவி அதில் இந்தக் கலவையைப் சமமாகப் பரப்பி, விரும்பிய வடிவில் 'கட்’ செய்யவும். விரும்பினால், வெள்ளரி விதையை கேக்கின் மேலே அலங்காரத்துக்காகத் தூவி பரிமாறலாம்.
மைதா கோகோ கேக்: பாதாம், முந்திரி பருப்புகளை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து சேர்த்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்
-------------------------------------------------------------
Post a Comment