பழகிய பொருள்... அழகிய முகம்! கும்குமப் பூவே... கொஞ்சும் அழகே...
பழகிய பொருள்... அழகிய முகம்! கும்குமப் பூவே... கொஞ்சும் அழகே... செக்கச் சிவப்பை அள்ளித் தருகிற குங்குமப்பூ, தோலை பளபளப்பாக்கி பளீரிட வைக்க...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_02.html
பழகிய பொருள்... அழகிய முகம்!
கும்குமப் பூவே... கொஞ்சும் அழகே...
செக்கச் சிவப்பை அள்ளித் தருகிற குங்குமப்பூ, தோலை பளபளப்பாக்கி பளீரிட வைக்கிறது. ஸ்பெயின் நாட்டில் அதிகமாக விளையும் குங்குமப் பூவின் விலையைப் போலவே, அது அள்ளித் தரும் பலன்களும் அதிகம்.
முகச் சுருக்கத்தைப் போக்கி பொலிவை கூட்டும் குங்குமப்பூவின் அசத்தல் டிப்ஸ்.
10 கீரல் குங்குமப்பூவை 1 டீஸ்பூன் பாலில் கலந்து ஊறவைத்து நன்றாக மசியுங்கள். இதை முகத்தில் பூசி உலர்ந்ததும் கழுவுங்கள். முகச் சுருக்கம் காணாமல் போய், 10 வயது குறைவாக காட்டும்.
மழைக் காலம். தோலில் வறட்சி தாண்டவமாடும். வறட்டுத்தன்மையை அடியோடு அகற்ற செய்கிறது குங்குமப்பூ.
பாதாம்பருப்பு - 25 கிராம், ரவை - 30 கிராம், குங்குமப்பூ - 10 கிராம்... இவற்றை நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். இது கலக்கும் அளவுக்கு பசும்பால் சேர்த்து, வடை மாதிரி செய்து உலர்த்துங்கள். இதில் ஒன்றை எடுத்து, பால் ஏடு கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
ரவை, தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றி, புது செல்களை உருவாக்கும். பாதாம், வறட்சியைப் போக்கும். குங்குமப்பூ, நிறத்தைக் கொடுத்து வசீகர அழகை வழங்கும்.
முகத்தில் தொய்வு இல்லாமல் பளிங்கு போல் மாற்றிக் காட்டுகிறது, இந்த குங்குமப்பூ ஸ்க்ரப்.
சர்க்கரையை அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அது கலக்கும் அளவுக்கு வெண்ணெய், குங்குமப்பூ சம அளவு சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு கைகளால் நுரை வரும் வரை நன்றாக மசியுங்கள். க்ரீமாக வந்ததும், முகப் பகுதியில் கீழிருந்து மேல் நோக்கி பூசி, ஐந்து நிமிடம் நன்றாக தேயுங்கள்.
பத்து நாட்களுக்கு ஒரு முறை இப்படி செய்து வர, முகம் தொய்வில்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
விசேஷங்களுக்கு போகும்போது அழகாக தெரிய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்தான். இதற்கு பியூட்டி பார்லருக்குதான் ஓட வேண்டும் என்பதில்லை. இந்த குங்குமப்பூ ப்ளீச் செய்து பாருங்கள்.
குங்குமப்பூவை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன், முல்தானிமட்டி - 2 டீஸ்பூன்... இதனுடன் வெந்நீர் சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். முகம், கழுத்து பகுதிகளில் ‘திக்'காக பூசி, ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள்.
பியூட்டி பார்லருக்கு போய் ‘ப்ளீச்' செய்தது போல் பளிச்சென மின்னும்.
Post a Comment