ஹைய்யா ஜாலி.. 30 வகை போளி!

ஹைய்யா ஜாலி.. 30 வகை போளி! 'போளிகளில் இத்தனை வகையா?' என்று வியந்து போகும் அளவுக்கு வித்தியாசமாக செய்து காட்டி பிரமிக்க வைத்திருக்கிற...

ஹைய்யா ஜாலி.. 30 வகை போளி! 'போளிகளில் இத்தனை வகையா?' என்று வியந்து போகும் அளவுக்கு வித்தியாசமாக செய்து காட்டி பிரமிக்க வைத்திருக்கிறார் 'சுவையரசி' . காரம், இனிப்பு, புளிப்பு என நாவுக்கு ருசி அளிக்கும் அறுசுவை போளியும், உடலுக்கு நலம் சேர்க்கும் மூலிகை போளியும் இதில் அடக்கம் என்பது சிறப்பு அம்சம். தினமும் ஒன்றாக செய்து தந்து குடும்பத்தை குஷிப்படுத்துங்கள். --------------------------------------------------------------------- கடலைப்பருப்பு வெல்ல போளி தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதா - ஒண்ணே கால் கப், உப்பு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு. செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மைதாவை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி மூடி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப்பருப்பை காய் பக்குவத்தில் வேக வைத்து வடிய வைக்கவும். ஆறியதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, திரும்பவும் நன்றாக அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவை, ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறவும். கெட்டியாக வரும் பக்குவத்தில் சிறிது நெய் விட்டு, நன்றாக கிளறி இறக்கவும். பிசைந்த மைதாவை சிறிது எடுத்து அப்பளம் போல் செய்து கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து மூடி, அப்பள குழவியால் போளி போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். ----------------------------------------------------------------------------------- ரவை போளி தேவையானவை: ரவை - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - கால் கப் , ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதாமாவு டீஸ்பூ- ஒரு கப், கோதுமைமாவு - கால் கப், உப்பு - கால் டீஸ்பூன். செய்முறை: மைதாமாவு, கோதுமைமாவு, உப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து நெய் தடவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரி துண்டுகளை போடவும். உடனே, ரவையைப் போட்டு, சிவக்க வறுத்து தேங்காய் துருவலை சேர்க்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இந்த வெல்ல கரைசலை ரவையில் கொட்டி, கெட்டியாகக் கிளறி இறக்கி ஏலக்காய்த்தூளை சேர்க்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ரவை பூரணத்தை வைத்து மூடி போளி போல் தட்டி, தோசைக் கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். குறிப்பு: மாவு பிசையும்போது முதலில் தண்ணீரை விட்டு கலந்த பிறகே எண்ணெய் (அ) நெய் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், மாவு சேர்ந்தாற்போல் வராமல் பிரிந்துவிடும். ----------------------------------------------------------------------- பால் போளி தேவையானவை: பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை சேர்க்காத கோவா - கால் கப், சர்க்கரை - கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு - முக்கால் கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பால் - 7 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை. செய்முறை: கார்ன்ஃப்ளார், மைதாமாவு, உப்பு மூன்றையும் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, நெய் விட்டு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பாலை அடுப்பில் வைத்து பாதியாக சுண்ட காய்ச்சவும். அதில், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, குங்குமப்பூவை கலந்து இறக்கி தனியாக வைக்கவும். கோவா, முந்திரி, பாதாம், பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். மைதாமாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ஒரு டீஸ்பூன் இந்த பருப்பு கலவையை வைத்து நன்றாக அழுத்தி மூடவும். (எண்ணெயில் பொரிக்கும்போது வெளியில் வராத அளவுக்கு) எண்ணெய் காய்ந்ததும், மிதமான தீயில் எல்லா போளிகளையும் பொரித்து எடுக்கவும். பிறகு சுண்ட காய்ச்சிய பால் கலவையில் போடவும். குறிப்பு: பாலில் ஊறி சாப்பிட சுவையாக இருக்கும். சூடாகவும் சாப்பிடலாம். ஜில்லென்றும் பரி மாறலாம். ----------------------------------------------------------------------------- வெஜிடபிள் போளி தேவையானவை: கோஸ், கேரட், பட்டாணி, வெங்காயத்தாள், குடமிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய் - விருப்பத்துக்கேற்ப, கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், மைதா - ஒரு கப், சிறிய ரவை - கால் கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை: ரவையில் உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி கலந்து, அதில் மைதாவை சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கோஸ், கேரட்டை துருவி பட்டாணியை ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு எடுக்கவும். இதனுடன் வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி சேர்க்கவும். குடமிளகாய் விதைகளை எடுத்துவிட்டு, மெல்லியதாக சீவி கோஸ் கலவையுடன் சேர்க்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் உப்பு சேர்த்து வதக்கி, பிறகு காய்கறி கலவையை சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கியதும், கடலைமாவை தூவி, கிளறி இறக்கவும். ஊற வைத்துள்ள மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் காய்கறி கலவையை வைத்து போளிகளாக தட்டி எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். ------------------------------------------------------------------- மரவள்ளிக்கிழங்கு கார போளி தேவையானவை: மர வள்ளிக்கிழங்கு துண்டுகள் - 2 கப், கொத்த- மல்லி - சிறிது, மஞ்சள்தூள் - கால் -டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - சுட்டெடுக்க தேவையான அளவு, மைதாமாவு - ஒரு கப், கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன். மசாலாத்தூள்: தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5 இவற்றை வறுத்து அரைத்த பொடி. செய்முறை: மைதாமாவு, கார்ன்ஃப்ளார், கோதுமைமாவு, உப்புடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இதனுடன் கொத்தமல்லி, மஞ்சள்தூள், மசாலாத்தூள், உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மைதாவை சிறிய அப்பளமாக இட்டு, அதில் மரவள்ளிக்கிழங்கு பூரணத்தை வைத்து மூடி போளியாக தட்டி எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி எடுக்கவும். ------------------------------------------------------------------------------- பழ போளி தேவையானவை: நீர் சத்து குறைந்த நறுக்கிய 4, 5 பழ வகைகள் - ஒரு கப், கோதுமைமாவு - ஒரு கப், நெய் - தேவையான அளவு, சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், மைதாமாவு - ஒரு கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், செய்முறை: கோதுமைமாவை நெய் விட்டு குறைந்த தீயில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன், பழக்கலவை, சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். மைதாமாவு, கார்ன்ஃப்ளாருடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சிறிய அப்பளமாக இட்டு, அதில் பழக்கலவையை வைத்து மூடி லேசாக கையால் தட்டி, இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். -------------------------------------------------------------------------- ரிச் போளி தேவையானவை: பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட், வெள்ளரி விதை - தலா கால் கப், சர்க்கரை - அரை கப், மைதா - ஒரு கப், நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: மைதாவுடன் உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக கலந்து நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் பருப்பை சிறிது சுடுநீரில் போட்டு தோல் உரித்து பிறகு எல்லா பருப்புகளையும் 2 மணி நேரம் சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை, நெய், பருப்பு விழுது சேர்த்து குறைந்த தீயில் வைத்து கெட்டியாக கிளறவும். மைதாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் பருப்பு பூரணத்தை வைத்து போளி போல் தட்டி, இரு புறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். ---------------------------------------------------------------------------- தேங்காய் கோவா போளி தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை சேர்த்த கோவா - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, மைதாமாவு - அரை கப், கோதுமைமாவு - கால் கப், கார்ன்ஃப்ளார்- கால் கப், உப்பு - கால் டீஸ்பூன். செய்முறை: அடி கனமான ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், சர்க்கரை இரண்டையும் சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். கெட்டியாக வரும் பக்குவத்தில் அதனுடன் கோவா, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கடைசியாக ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கவும். மைதாமாவு, கோதுமைமாவு, கார்ன்ஃப்ளார் மூன்றையும் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்த மாவில் சிறிது எடுத்து அப்பளம் போல் இட்டு, அதில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, போளியாக தட்டி இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். -------------------------------------------------------------------------------- சர்க்கரை போளி தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதாமாவு - ஒரு கப், நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: மைதாமாவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அரை வேக்காட்டில் வேக வைத்து வடிய வைக்கவும். சர்க்கரையை தூளாக்கி கொள்ளவும். பிறகு, வேகவைத்த கடலைப்பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து ஒரு சுற்று சுற்றி, ஏலக்காய்த்தூளை சேர்த்து கலந்து வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறு அப்பளங்களாக இட்டு, அதில் கடலைப்பருப்பு கலவையை வைத்து மெல்லிய போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு, இருபுறமும் சுட்டெடுக்கவும். --------------------------------------------------------------------------- வேர்க்கடலை - கசகசா போளி தேவையானவை: வேர்க்கடலை ஒரு கப், கசகசா - அரை கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதாமாவு - ஒரு கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வேர்க்கடலையை வறுத்து தோல் எடுத்து கரகரப்பாக பொடிக்கவும். கசகசாவை வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர்விட்டு கொதித்ததும் வடிகட்டி பாகாக காய்ச்சவும். வெல்லம் கெட்டிபாகு பதம் வந்தவுடன் வேர்க்கடலைப்பொடி, கசகசா, ஏலக்காய்த்தூள் மூன்றையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். மைதாமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த மாவில் சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் வேர்க்கடலை பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு சுட்டெடுக்கவும். -------------------------------------------------------------------------------- ஜவ்வரிசி போளி தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், மைதாமாவு - ஒரு கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - தேவையான அளவு. செய்முறை: ஜவ்வரிசியை வெறும் கடாயில் நன்றாக பொரித்துக் கொள்ளவும். மைதாமாவு, கார்ன்ஃப்ளார், உப்புடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். ஜவ்வரிசியை மிக்ஸியில் பொடித்து, கொதிக்கும் சர்க்கரை தண்ணீரில் சேர்த்து, கெட்டியாக கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும். கடைசியில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மைதா கலவையை சிறிது எடுத்து அப்பளம் போல் இட்டு, ஜவ்வரிசி பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு நெய்விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். -------------------------------------------------------------------------- அரிசிமாவு போளி தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - கால் கப், முந்திரி துண்டுகள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் தேங்காய் துருவல் - கால் கப், மைதாமாவு - ஒரு கப், மெல்லிய ரவை - கால் கப், நெய் - தேவையான அளவு, உப்பு - கால் டீஸ்பூன். செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நிழலில் உலர்த்தி மாவாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை கால் கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, திரும்பவும் அடுப்பில் வைக்கவும். இதில் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து, அரைத்து வைத்துள்ள அரிசிமாவை சிறிது சிறிதாக கொட்டி, கிளறி சிறிது நெய் ஊற்றி இறக்கவும். ரவையில் வெந்நீரை விட்டு கிளறி (ரவையில் வெந்நீரில் கலப்பதால் மிருதுவாக இருக்கும்) அதில் மைதா, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை சிறிய அப்பளங்களாக இட்டு, அரிசி மாவு பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். -------------------------------------------------------------------------- புதினா போளி தேவையானவை: பொடியாக நறுக்கிய புதினா - ஒரு கப், கோதுமைமாவு - அரை கப், மைதாமாவு - முக்கால் கப், உப்பு - கால் டீஸ்பூன், நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - கால் கப். செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். புதினாவுடன், உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கலக்கவும். மைதாமாவுடன் கோதுமைமாவு, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மைதா கலவையை சிறிது எடுத்து அதில் புதினா பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். ------------------------------------------------------------------------------- பேரீச்சம்பழ போளி தேவையானவை: பேரீச்சம்பழம் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், பால் பவுடர் - அரை கப், மைதாமாவு - ஒரு கப், கார்ன் ஃப்ளார் - கால் கப், உப்பு - கால் டீஸ்பூன். செய்முறை: பேரீச்சம்பழத்தை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும். பிறகு அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் சர்க்கரை, பால் பவுடர் கலந்து வைத்துக் கொள்ளவும் (தளர இருந்தால் மேலும் சிறிது பால் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம்). தேவையெனில் டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்கலாம். மைதா, கார்ன்ஃப்ளார் இரண்டையும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த மாவில் சிறிது எடுத்து சிறிய அப்பளங்களாக இட்டு அதில் பேரீச்சம்பழக் கலவையை வைத்து மூடி, சிறிய போளிகளாக தட்டி இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். --------------------------------------------------------------------------- வெந்தயக்கீரை போளி தேவையானவை: வெந்தயக் கீரை - ஒரு கப், கடலைமாவு - ஒரு கப், பச்சைமிளகாய் - 4, மைதாமாவு - அரை கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், கோதுமைமாவு - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மைதாமாவு, கோதுமைமாவு, கார்ன்ஃப்ளாருடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து கெட்டியாக பிசைந்து எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலை மாவை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் வறுத்து வைத்துள்ள கடலைமாவை அதில் சேர்த்து கிளறவும். தேவையெனில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறை விடலாம். மைதா கலவையை சிறிய அப்பளமாக இட்டு, அதில் வெந்தயக்கீரை பூரணத்தை வைத்து மூடி போளிகளாக தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். ------------------------------------------------------------------------------ தானிய போளி தேவையானவை: பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, காராமணி, எள்ளு ஐந்தும் சேர்த்து - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - அரை மூடி, மைதாமாவு - ஒண்ணேகால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தானியங்களை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். தேங்காய், தனியா, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதில் எலுமிச்சை சாறு விட்டு, வேக வைத்து வடித்துள்ள தானியங்களைப் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மைதா மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து, எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அர்த்தநாரீஸ்வரரை விடவும் சிறந்த எடுத்துக் காட்டு உண்டா என்ன? ஆண் பாதி பெண் பாதியாக.. ஆணே பெண்ணாக.. பெண்ணே ஆணாக.. ஆணும் பெண்ணும் சேர்ந்த ஒற்றை உயிராக.. பிரித்தறிய முடியாமல் பிணைந்திருப்பதுதான் தாம்பத்யம். தேவையானவை: பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி - தலா கால் கப், உருளைக்கிழங்கு - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ரஸ்க் தூள் - கால் கப், கடலைமாவு - கால் கப், மைதாமாவு - முக்கால் கப், கார்ன்ஃப்ளார் - அரை கப், கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை பட்டாணி சேர்க்கவும் (காய்ந்த பட்டாணி என்றால் ஊற வைத்து, வேக வைத்து சேர்க்கலாம்). சற்று வதங்கியதும், வேக வைத்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் கடலைமாவை தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் உள்ள கலவையில் ஊற்றவும். எல்லாம் சேர்ந்து கெட்டியாக வரும்போது ரஸ்க் தூள், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். மைதாமாவு, கார்ஃப்ளாருடன் உப்பு சேர்த்து பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிறிய அப்பளங்களாக இடவும். மசாலா பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். --------------------------------------------------------------------------------- பரங்கி போளி தேவையானவை: துருவிய பரங்கிக்காய் - ஒரு கப், வெல்லம் - கால் கப், பொட்டுக்கடலை மாவு - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதாமாவு - ஒரு கப், அரிசிமாவு - கால் கப், உப்பு - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு. செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி துருவிய பரங்கிக்காயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெல்லத்தை பொடித்து அதனுடன் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து நன்றாக கொதித்ததும் பொட்டுக்கடலைமாவை சிறிது சிறிதாக சேர்த்து, கடைசியில் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். மைதாமாவு, அரிசிமாவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு இந்த மாவை அப்பளங்களாக இட்டு, அதில் பரங்கி பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். --------------------------------------------------------------------------------------- கேழ்வரகு போளி தேவையானவை: கேழ்வரகுமாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், இஞ்சி, பச்சைமிளகாய் - சிறிதளவு, துருவிய முள்ளங்கி - கால் கப், மைதாமாவு, கோதுமைமாவு - தலா அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், இஞ்சியை வதக்கவும். பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கி, கடைசியில் துருவிய முள்ளங்கியை சேர்த்து வாசனை போக வதங்கியதும், அதில் கால் கப் தன்ணீரை ஊற்றி அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கேழ்வரகுமாவை சிறிது சிறிதாக அதில் போட்டு, கெட்டியாக கிளறி இறக்கவும். மைதாமாவு, கோதுமைமாவு இரண்டையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இதை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் கேழ்வரகு பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். --------------------------------------------------------------------------------------- சேமியா போளி தேவையானவை: சேமியா - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துருவிய முந்திரி, பாதாம் - சிறிதளவு, மைதா - ஒரு கப், கேசரி கலர் - ஒரு சிட்டிகை, உப்பு - கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு. செய்முறை: சேமியாவை குறைந்த தீயில் நெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் வறுத்த சேமியாவை போட்டு, சர்க்கரை, துருவிய பருப்பு வகைகள், ஏலக்காய்த் தூள் சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும். மைதா, கேசரி கலர், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இந்த மாவை சிறிய அப்பளங் களாக இட்டு, அதில் சேமியா பூரணத்தை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். ---------------------------------------------------------------------------------- சில்லி போளி தேவையானவை: பொடியாக நறுக்கிய பஜ்ஜி மிளகாய் - ஒரு கப், சர்க்கரை வள்ளிக்கிழங்கு - ஒரு கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மைதாமாவு - ஒரு கப், அம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் சீவி, வேக வைத்து எடுக்கவும். பஜ்ஜி மிளகாயுடன், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெயில் நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு வேக வைத்த கிழங்குடன் வதக்கிய மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து பிசையவும். மைதாவுடன் கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் மிளகாய் பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி தோசைகல்லில் இருபுறமும் திருப்பிப்போட்டு சுட்டெடுக்க வும். -------------------------------------------------------------------------------- பிரெட் வெஜ் போளி தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, விரும்பிய காய்கறிகள் கலவை - ஒரு கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கோதுமை மாவு - ஒன்றரை கப், கார்ன்ஃப்ளார் - அரை கப், பால் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காய்கறிகளை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். இதை காய்கறி கலவையுடன் சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கோதுமைமாவு, கார்ன்ஃப்ளார் இரண்டை யும் உப்பு சேர்த்து பாலை ஊற்றி பிசைந்து (தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்) ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்த மாவை சிறிய அப்பளங்களாக இடவும். அதில் பூரணத்தை வைத்து முடி, போளிகளாக தட்டி தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். ------------------------------------------------------------------------ கோதுமை ரவை போளி தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதா - அரை கப், கடலைமாவு, கோதுமைமாவு, கார்ன்ஃப்ளார் - தலா கால் கப், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கோதுமை ரவையை ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சிவக்க வறுக்கவும். முக்கால் கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதை வறுத்த ரவையில் ஊற்றி வேகும் வரை கிளறி சர்க்கரை சேர்க்கவும். நன்றாக கிளறி கெட்டியாக வந்ததும், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். மைதாமாவு, கடலைமாவு, கோதுமைமாவு, கார்ன்ஃப்ளாருடன் சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்த மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் கோதுமை ரவை பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். ------------------------------------------------------------------------------------ ஹெர்பல் போளி தேவையானவை: துளசி இலை, கற்பூரவல்லி இலை, தூதுவளை இலை, கண்டந்திப்பிலி, வல்லாரை, வெற்றிலை எல்லாம் சேர்த்து - ஒரு கப், ரவை - ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மைதா - ஒரு கப், கோதுமைமாவு - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: எல்லா இலைகளையும் நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ரவையை தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய இலைகளை வதக்கி முக்கால் கப் தண்ணீர் விடவும். பிறகு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கடைசியாக வறுத்த ரவையை சேர்த்து கிளறவும். மைதாமாவு, கோதுமை மாவை உப்பு சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இந்த மாவை சிறிய அப்பளங்களாக செய்து அதில் ஹெர்பல் பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். -------------------------------------------------------------------------------- அறுசுவை போளி தேவையானவை: வெல்லம் - கால் கப், துருவிய மாங்காய், நெல்லிக்காய் - தலா கால் கப், பச்சைமிளகாய் - 2, வேப்பம்பூ - ஒரு டீஸ்பூன், கோதுமைமாவு - ஒரு கப், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு டீஸ்பூன் நெய்யில் வேப்பம்பூவை வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் பச்சைமிளகாயை கிள்ளிப் போட்டு, துருவிய நெல்லிக்காய், மாங்காயை சேர்க்கவும். சற்று வதங்கியதும் வெல்லம், உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக வறுத்த வேப்பம்பூவை போட்டு கிளறி இறக்கவும் (பூரணம் சற்று தளர இருந்தால், சிறிது அரிசிமாவை தூவி இறக்கலாம்). கோதுமைமாவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இதை சிறிய அப்பளங்களாக செய்து, அதில் பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். ------------------------------------------------------------------------------ ஜீரா போளி தேவையானவை: மைதாமாவு, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு. செய்முறை: மைதாமாவை சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையுடன் ஏலக்காய்த்தூள், ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 கம்பி பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மைதாவை மெல்லிய போளிகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் போட்டு எடுத்து வைக்கவும். ட்ரை ஃப்ரூட்ஸால் அலங்கரித்துக் கொள்ளலாம். -------------------------------------------------------------------------------------------- பாசிப்பருப்பு கார போளி தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, எலுமிச்சம்பழம் - அரை மூடி, பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், கோதுமைமாவு, மைதா - தலா அரை கப், எண்ணெய் அல்லது நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை 20 நிமிடம் ஊற வைத்து நீரை வடிய வைக்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழ சாறு பிழிந்து பிசறி வைக்கவும். கோதுமைமாவு, மைதாமாவுடன் சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இந்த மாவை சிறிய அப்பளங்களாக செய்து அதில் பாசிப்பருப்பு பூரணத்தை வைத்து மூடி எண்ணெய் விட்டு, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சுட்டெடுக்க வும். -------------------------------------------------------------------------------------- உளுத்தம்பருப்பு போளி தேவையானவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப், கருப்பட்டி - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதாமாவு - ஒரு கப், உப்பு, நெய் - தேவையான அளவு. செய்முறை: உளுத்தம்பருப்பை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து பொடித்து வைத்துள்ள உளுத்தமாவை அதில் சேர்த்து சிறிது நெய் விட்டு கெட்டியாக கிளறவும். மைதாமாவு, உப்புடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு அப்பளங் களாக இட்டு, அதில் உளுந்து பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும். --------------------------------------------------------------------------------------- ஸ்வீட் கார்ன் போளி தேவையானவை: ஸ்வீட் கார்ன் - ஒரு கப், சாஸ் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, மைதாமாவு - ஒரு கப், நெய் - சிறிதளவு, கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: ஸ்வீட் கார்னை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பிறகு அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொண்டு உப்பு, சாஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக கிளறவும். மைதாமாவு, கார்ன்ஃப்ளாருடன் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சிறிய அப்பளங்களாக செய்து அதில் ஸ்வீட் கார்ன் பூரணத்தை வைத்து போளி களாக தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். ------------------------------------------------------------------------------------- பாஸ்மதி அரிசி போளி தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கப், சர்க்கரை - கால் கப், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துருவிய பருப்புகள் (பாதாம், முந்திரி) - சிறிதளவு, உலர்ந்த திராட்சை - சிறிதளவு, மைதாமாவு - ஒரு கப், உப்பு - சிட்டிகை, நெய் - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சிவக்க வறுத்து ரவையாக பொடித்துக் கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து கொதி வந்ததும், அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு, நன்றாக கிளறி இறக்கவும். இதில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, துருவிய பருப்புகள், திராட்சை சேர்க்கவும். மைதாமாவை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்த மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் அரிசி பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 467102402431596940

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item