ரசிக்க ருசிக்க..! சுரைக்காய் அல்வா
சுரைக்காய் அல்வா தேவையானவை: சுரைக்காய் துருவல் - ஒரு கப், பால் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 3 டேபிள்...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_8205.html
சுரைக்காய் அல்வா
தேவையானவை: சுரைக்காய் துருவல் - ஒரு கப், பால் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், பொரி கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை: முதலில் சுரைக் காயை பால் விட்டு வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை போட்டு, அது கரைந்ததும் நெய் விட்டுக் கிளறவும். கெட்டியாக வரும்போது பொரிகடலை மாவைப் போட்டு, கிளறவும். நன்றாக கெட்டியானதும், ஏலக்காய்தூளைப் போட்டு கலந்து இறக்கவும். தேவையானால் சில சொட்டுகள் பைன் ஆப்பிள் எசன்ஸ் விட்டுக் கொள்ளலாம்.
சுரைக்காய் அல்வா: தண்ணீர் சத்து நிறைந்த சௌசௌவிலும் இந்த அல்வா செய்யலாம். துருவிய முந்திரி, பாதாம், சிறிது சிவப்பு கலர் எல்லாம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். பொரிகடலை மாவு சேர்க்காமலும் செய்யலாம். ஆனால், இன்னும் கூடுதலான நேரம் பிடிக்கும்.
----------------------------------------------------------------
Post a Comment