வாசகிகள் கைமணம்! பேரீச்சம்பழ அப்பம்
பேரீச்சம்பழ அப்பம் தேவையானவை: கோதுமை ரவை - அரை கப், பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 10, பச்சரிசி - ஒரு கப், வெல்லம் (பொடித்தது) - ஒரு கப...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_7835.html
பேரீச்சம்பழ அப்பம்
தேவையானவை: கோதுமை ரவை - அரை கப், பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 10, பச்சரிசி - ஒரு கப், வெல்லம் (பொடித்தது) - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு (ஒடித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியையும் கோதுமை ரவையையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரண்டையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு பேரீச்சம்பழத்தையும் வெல்லத் தையும் தேங்காய்துருவலையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, பச்சரிசி மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். ஏலக்காய்தூள், முந்திரி சேர்த்து, பணியார மாவு போன்ற பதத்தில் கரைத்துக்கொண்டு, காயும் எண்ணெ யில் அப்பங்களாக ஊற்றிப் பொரித்தெடுக்கவும்.
பேரீச்சம்பழ அப்பம்: வெல்லத்தை அப்படியே போட்டு அரைத்தால் கல், மண் கடிபடும். எனவே, சிறிது தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, அந்த நீரை அரிசி அரைப் பதற்குப் பயன்படுத்தலாம். வெல்லத்துக்குப் பதிலாக முழுவதுமே பேரீச்சம்பழங்களையே சேர்த்து அரைத் தால், ருசியும் அதிகம். இரும்புச்சத்தும் அதிகம்.
-----------------------------------------------------------------------------------
Post a Comment