வாசகிகள் கைமணம்! ஸ்வீட் சூரத்சாரி
ஸ்வீட் சூரத்சாரி தேவையானவை: ஆவின் பால் & இரண்டரை கப், கடலைமாவு & 2 டீஸ்பூன், பாதாம்பருப்பு & 50 கிராம், (தோல் உரித்து நறுக்கிக...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_7185.html
ஸ்வீட் சூரத்சாரி
தேவையானவை: ஆவின் பால் & இரண்டரை கப், கடலைமாவு & 2 டீஸ்பூன், பாதாம்பருப்பு & 50 கிராம், (தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும்) சாரப்பருப்பு & 10 கிராம், வெள்ளரிவிதை & 10 கிராம், குங்குமப்பூ & சிறிதளவு, மைதா மாவு & ஒன்றே கால் கப், சர்க்கரை & ஒன்றரை கப், நெய் அல்லது எண்ணெய் & இரண்டரை கப்.
செய்முறை: முதலில் வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி, நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும். சுண்டிய பாலில் கடலை மாவு, ஒரு ஸ்பூன் நெய், நறுக்கிய பாதாம், சாரப்பருப்பு, வெள்ளரி விதை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு சர்க்கரையில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, கம்பிப் பதத்துக்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும். மைதா மாவை சிறிது தண்ணீர் விட்டு, பூரி மாவு போல கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
நெய் அல்லது எண்ணெயை வாணலியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். ஒரு உருண்டையை எடுத்து சின்ன செப்பு போல கையினாலேயே செய்து, அதனுள் ஒரு கரண்டி பால் + பருப்புக் கலவையை வைத்து, நன்றாக மூடி, கையில் வைத்து வடை போல் நன்கு அழுத்தி, தனியே தட்டில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து எண்ணெய் அல்லது நெய்யில் போட்டு இருபுறமும் நன்கு சிவக்க விட்டு எடுக்கவும். எடுத்த வடைகளை உடைக்காமல் சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
சுடச்சுட ஸ்வீட் சூரத்சாரி ரெடி. இதை சூடாகவும் சாப்பிடலாம்.. ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, ‘ஜில்’லென்றும் பரிமாறலாம். சூப்பர் சுவையில் நாவை வசீகரிக்கும்.
ஸ்வீட் சூரத்சாரி: மைதா மாவில் 1 டேபிள்ஸ்பூன் ரவை சேர்த்துக்கொண்டால், சற்று கரகரப்பாக, கூடுதல் சுவை யுடன் இருக்கும். பார்ப்பதற்கும் சற்று அழகாக இருக்கும்.
----------------------------------------------------------------------------------------
Post a Comment