சமையல் குறிப்புகள்! குழிப்பணியாரம்
குஷி தரும் குழிப்பணியாரம் தேவையான பொருட்கள் இட்லி மாவு - 5 கப் தக்காளித் தொக்கு - 2 டேபிள் ஸ்பூன் பழ ஜாம் (மிக்ஸ்டு புரூட்ஸ்) - 2 டேபிள் ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_6758.html
குஷி தரும் குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - 5 கப்
தக்காளித் தொக்கு - 2 டேபிள் ஸ்பூன்
பழ ஜாம் (மிக்ஸ்டு புரூட்ஸ்) - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
வதக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை - 10 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* வெல்லத்தைப் பொடியாக நறுக்கி சிறிது நீர் சேர்த்து கெட்டியாகக் கொதிக்கவிட்டு உலோக வடிகட்டியில் தூசு நீங்க வடிகட்டி வெல்லச்சாறு தயாரிக்கவும்.
* நான்ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணை ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைக்கவும்.
* இட்லி மாவை 5 கப்களில் ஊற்றவும். 1 கப் இட்லி மாவில் தக்காளித் தொக்கும், இன்னொரு கப்பில் பழ ஜாம், ஒன்றில் வெல்லச்சாறு, ஒன்றில் வதக்கிய வெங்காயம், ஒன்றில் புதினா, கொத்தமல்லி, சட்னி என்று சேர்த்துக்கொள்ளவும்.
* குழிப் பணியார நான்ஸ்டிக் பாத்திரத்தில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணை ஊற்றி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கலவை மாவை குழியின் பாதியளவு இருக்கும் வரை ஊற்றி மெல்லிய தீயில் அடுப்பை எரியவிடவும். பணியாரங்கள் ஒருபக்கம் வெந்தவுடன் திருப்பி மறுபக்கம் வேகவிட்டு எடுக்கவும்.
***************************************************************
Post a Comment