இனிக்கும் இளமை! கம்பு வடை
இனிக்கும் இளமை! கம்பு வடை தேவையானவை சுத்தம் செய்த கம்பு - 2 கப், துவரம்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - கால...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_6582.html
இனிக்கும் இளமை!
கம்பு வடை
தேவையானவை
சுத்தம் செய்த கம்பு - 2 கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
உளுத்தம்பருப்பு - கால் கப்,
கடலைப்பருப்பு - கால் கப்,
பெருங்காயம் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய பச்சை
மிளகாய் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
பொரித்தெடுக்க எண்ணெய் - தேவையான அளவு,
தேங்காய் துருவல் - கால் கப்.
செய்முறை: கம்பை முந்தின நாள் இரவே ஊறவைக்கவும். பருப்புகளை தனியே ஊறப்போட்டு, அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு, கம்பை கிரைண்டர் அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்கவும். அது பாதி அரைபடும்போது, ஊறிய பருப்புகளைச் சேர்த்து, தேங்காய் துருவல், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த கலவையில் மல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்-தெடுக்கவும். கலக்கலாக இருக்கும் இந்த கம்பு வடை.
கம்பு வடை: விருப்பப்பட்டவர்கள், வெங்காயத்தைப் பொடி யாக நறுக்கி சேர்த்து வடை தட்டலாம். வாசனை தூக்கலாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------
Post a Comment