சமையல் குறிப்புகள்! சூப்பர் ரெசிபி!
சூப்பர் ரெசிபி! சூப்பரான மோர்க்குழம்பு! புது வகையான மோர்க்குழம்பு வேண்டுமா? நாலு பெரிய நெல்லிக்காயை குக்கரில் வேக வைத்து, கொட்டை நீக்கி, ச...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_6480.html
சூப்பர் ரெசிபி!
சூப்பரான மோர்க்குழம்பு!
புது வகையான மோர்க்குழம்பு வேண்டுமா? நாலு பெரிய நெல்லிக்காயை குக்கரில் வேக வைத்து, கொட்டை நீக்கி, சிறிது தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரையுங்கள். அந்த விழுதை, கெட்டியான மோரில் கலக்கி, அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி... கடுகு, கறிவேப்பிலை தாளித்தால், சூப்பர் டேஸ்ட்டில் புதுவகை மோர்க்குழம்பு ரெடி!
--------------------------------------------------------------------
ரெடிமேட் பாயசம்!
அவல், பாசிப்பருப்பு ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்யுங்கள். இந்த பவுடரில் 2 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலக்கி கொதிக்க வைத்து பால், சர்க்கரை ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்தால்... நொடியில் பாயசம் ரெடி. இந்தப் பொடியை சேமித்து வைத்து பாயசம் தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்தலாம்!
-----------------------------------------------------------
வாழைத்தண்டு - முட்டைகோஸ் பொரியல்!
வாழைத்தண்டு பொரியல் செய்யும்போது, முட்டைகோஸையும் மெல்லிய நீளத்தில் நறுக்கி, அதில் கலந்து சமையுங்கள். வாழைத்தண்டு சாப்பிடுவதற்கு அடம் பிடிக்கும் குழந்தைகள்கூட, சமர்த்தாகச் சாப்பிடுவார்கள்.
-----------------------------------------------------------------
சில்லி சைட் டிஷ்!
கைப்பிடி பச்சை மிளகாயை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, நல்லெண்ணெயில் சுருள வதக்கவும். மிளகாயின் அளவுக்கு ஏற்ப புளியை சிறிது தண்ணீரில் கெட்டியாகக் கரைத்துச் சேர்க்கவும். கூடவே வெந்தயப்பொடி, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சிறிதளவு சேர்த்துக் கொதிக்கவிடவும். குளுகுளு தயிர் சாதத்துக்கு, சூப்பரான சில்லி சைட் டிஷ் ரெடி!
-------------------------------------------------------------------------------------------
வாழைப்பூ துவையல்!
மோரில் ஊற வைத்த வாழைப்பூவை சிறிது நெய்யில் வதக்கி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி சேர்த்து அரைத்தால், சுவையான துவையல் தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்!
--------------------------------------------------------------------------------
Post a Comment