இனிக்க இனிக்க! வாழைத்தண்டு அல்வா
இனிக்க இனிக்க! வாழைத்தண்டு அல்வா தேவையானவை நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழை தண்டு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், நெய் - கால் கப், ஏலக்க...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_6422.html
இனிக்க இனிக்க!
வாழைத்தண்டு அல்வா
தேவையானவை
நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழை தண்டு - ஒரு கப்,
சர்க்கரை - அரை கப்,
நெய் - கால் கப்,
ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: வாணலியில் சிறிது நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.மீதமுள்ள நெய்யில் வாழைத்தண்டைச் சேர்த்து, நன்கு வதக்கவும். தண்ணீர் சத்து போய் நன்கு சிவக்க வதங்கிய பிறகு, சர்க்கரையை அதில் கொட்டிக் கிளறவும். இரண்டும் சேர்ந்து கெட்டியாகி, அல்வா போல சுருண்டு வந்ததும் இறக்கவும். பிறகு, வறுத்த முந்திரிப்பருப்பையும் ஏலக்காய்தூளையும் இந்த வாழைத்தண்டு அல்வாவில் சேர்க்கவும். விருப்பப்பட்டால் ஃபுட் கலர் ஏதாவது சேர்க்கலாம்.
வாழைத்தண்டு அல்வா: இந்த அல்வாவில் இன்னும் சுவை சேர்க்க வேண்டுமானால், சர்க்கரை இல்லாத கோவாவை சிறிதளவு சேருங்கள். நீங்கள் சொன்னால் தான் தெரியும், இது வாழைத் தண்டில் செய்தது என்று, அவ்வளவு ருசியாக இருக்கிறது.
------------------------------------------------------------------
Post a Comment