சமையல் குறிப்புகள்! இறால் பிரியாணி
இறால் பிரியாணி தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ அரிசி - 2 ஆழாக்கு வெங்காயம், தக்காளி - 150 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் புதி...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_4421.html
இறால் பிரியாணி
தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
அரிசி - 2 ஆழாக்கு
வெங்காயம், தக்காளி - 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
செய்முறை
* இறாலை குடல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும். எண்ணை காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும். பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு- விழுது சேர்த்து வதக்கவும்.
* தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இவற்றையும் சேர்த்து வதக்கவும்.
* மிளகாய்த்தூள், தனியாத்தூள், தயிர் சேர்க்கவும்.
* இறாலை நன்கு வதக்கிவிட்டு அரிசியைச் சேர்த்து வதக்கவும்.
* பாசுமதி அரிசிக்கு ஒன்றரை பங்கு நீரும், சாதாரண அரிசிக்கு இரு பங்கு நீரும் ஊற்றவும்.
* தேவையான அளவு உப்பு சேர்க்கவும். `தம்' போட்டு பிரியாணியை இறக்கிவிடவும்.
*****************************************************************
Post a Comment