தித்திக்க... தித்திக்க... சொஜ்ஜி அப்பம்
தித்திக்க... தித்திக்க... சொஜ்ஜி அப்பம் தேவையான பொருட்கள்: ரவை - 1 கப், வெல்லம் - 1 கப், தேங்காய்த்துருவல் - 1 கப், ஏலக்காய் - 4, மைதா - ஒ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_4088.html
தித்திக்க... தித்திக்க...
சொஜ்ஜி அப்பம்
தேவையான பொருட்கள்: ரவை - 1 கப், வெல்லம் - 1 கப், தேங்காய்த்துருவல் - 1 கப், ஏலக்காய் - 4, மைதா - ஒன்றரை கப், நெய் - அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 கப், உப்பு - சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தைத் தூளாக்கி, சிறிது நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ள வும். மைதா மாவில் உப்பை சேர்த்து, பூரி மாவுபோல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி அதில் ரவையைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, வெல்லக் கரைசல் எல்லாவற்றை யும் சேர்த்து, மாவு கெட்டி ஆகும்வரை கிளறவும்.
அதுவே தானாக பந்துபோல் சுருண்டு வந்துவிடும். அதை நன்றாக ஆறவைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும். பிசைந்து வைத்திருக்கும் மைதாமாவை சிறிது எடுத்து மெல்லிசாகப் பரப்பி, அதில் ரவை பூரணத்தை வைத்து மூடி, கையில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு, வட்டமாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். குழந்தைகளின் ஃபேவரிட் இந்த அப்பம்!
சொஜ்ஜி அப்பம்: இது நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பொன்னிறமாக எடுத்தால் சுவை நன்றாக இருக்கும். செந்நிறமாக மாறவிட வேண்டாம்.
---------------------------------------------------------------------------------------
Post a Comment