வாசகிகள் கைமணம்! வெந்தய உருண்டை
வெந்தய உருண்டை தேவையானவை: வெந்தயம் & அரை கப், கடலைப்பருப்பு & ஒரு கப், நெய் அல்லது டால்டா & ஒன்றேகால் கப், சர்க்கரை & 5 கப...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_3771.html
வெந்தய உருண்டை
தேவையானவை: வெந்தயம் & அரை கப், கடலைப்பருப்பு & ஒரு கப், நெய் அல்லது டால்டா & ஒன்றேகால் கப், சர்க்கரை & 5 கப், ஏலக்காய் தூள், முந்திரிப்பருப்பு & தேவைக்கேற்ப.
செய்முறை: கடலைப்பருப்பையும், வெந்தயத்தையும் தனித்தனியே ரவை போல் உடைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு, காய்ந்ததும் உடைத்த கடலைப்பருப்பைப் போட்டு, முக்கால் பதம் சிவந்ததும் வெந்தய ரவையைப் போட்டு சிவக்கவிட்டு இறக்கிக் கொள்ளவும். ஆறியதும் சர்க்கரை யைப் பொடி செய்து, கலந்து நன்கு பிசையவும். ஆறியதும் முந்திரிப் பருப்புத் துண்டுகளைப் போட்டு, உருண்டைகளாகப் பிடிக்கவும். சர்க்கரைக்கு பதில், ஏதேனும் ஸ்வீட்னர் சேர்த்தால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் சாப்பிட ஏற்ற ஸ்வீட் இது.
வெந்தய உருண்டை: வெந் தயத்தையும், கடலைப் பருப்பையும் தனித்தனியே வறுத்து, பிறகு ரவை போல உடைத்தால், சுலபமாக உடைந்து விடும். பின்னர் நெய் விட்டு, இரண்டையும் போட்டு கிளறினால் சுலபமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------
Post a Comment