சமையல் குறிப்புகள்! முட்ட மாலா
முட்ட மாலா தேவையானவை: முட்டை - 10 சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1 கப் செய்முறை: முதலில் முட்டையிலிருந்து மஞ்சள் கருவை தனியாக பிரித்து ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_335.html
முட்ட மாலா
தேவையானவை:
முட்டை - 10
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் முட்டையிலிருந்து மஞ்சள் கருவை தனியாக பிரித்து எடுத்து வைக்கவும்.
பின்பு மஞ்சள் கருவை நன்றாக அடித்து வைக்க்வும்.கட்டியில்லாமல் இருப்பதற்காக வடிகட்டிக் கொள்ளவும்
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு சிறிய டிஸ்போசபில் கப்பில் குட்டியாக கீழே ஒரு ஓட்டை போடவும்..இடியப்பத்திற்கான சில்லில் உள்ள ஓட்டையின் அளவு போதும் .அதில் முட்டையின் மஞ்சளை நிரப்பி கீழே துளையை விரலால் அழுத்தி மூடி வைக்கவும்
சர்க்கரை கரைந்தது பாகு கொதிக்க தொடங்கியதும் முட்டையின் வெள்ளை 1 சொட்டு விடவும்..மேலே பொங்கும் அழுக்கை வடித்து நீக்கி விடவும்
பின்பு முட்டையின் மஞ்சள் உள்ள க்லாஸை விரலை எடுத்து விட்டு நேராக மஞ்சள் கரு பாகில் முறுக்கு போல விழ விடவும்..பரவலாக சுற்றி சுற்றி ஊற்றி முடிக்கவும்
1 நிமிடத்தில் பாகிலேயே வெந்து விடும்..பின்பு அதனை வாரி எடுத்து ஒரு தட்டில் போடவும்
மீதமான பாகை சூடாறியதும் மீதமுள்ள முட்டையின் வெள்ளையில் கலந்து சிறிது ஏலக்காய் தூள் கலந்து பாத்திரத்தில் கொட்டி இட்லி பானையில் அவிக்க விடவும்
வெந்தது சூடாறியதும் அதனை துண்டுகளாக்கி மஞ்சள் கருவால் செய்த நூல் போன்ற மாலையின் மேல் அலங்கரித்து பரிமாறவும்
Post a Comment