சுவையான சத்தான ஸ்டஃப்டு பாலக்!
ஸ்டஃப்டு பாலக் தேவையானவை: பாலக் (பசலை) கீரை - ஒரு கட்டு (நமக்கு தேவையான கிழியாத பெரிய இலைகளாக எடுத்து கொள்ளவும்), அமெரிக்கன் கார்ன் அல்லது...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_3206.html
ஸ்டஃப்டு பாலக்
தேவையானவை: பாலக் (பசலை) கீரை - ஒரு கட்டு (நமக்கு தேவையான கிழியாத பெரிய இலைகளாக எடுத்து கொள்ளவும்), அமெரிக்கன் கார்ன் அல்லது மக்காச்சோளம் - 3, தனியாதூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், டொமேடோ ப்யூரி (தக்காளி சாறு) - அரை கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாலக் கீரையில் பெரிய இலைகளாக எடுத்து, தண்டை நீக்கிவிட்டு சுத்தம் செய்து, சுடுநீரில் அமிழ்த்தி எடுத்து ஈரமில்லாமல் துடைத்துவைக்கவும். அமெரிக்கன் கார்னை உதிர்த்து வேகவைக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சியைப் போட்டு, பிறகு தனியாதூள், சீரகத்தூள், மிளகாய்தூள், பெருங்காயம், உப்பு, மஞ்சள்தூள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். அத்துடன் வேகவைத்த சோளமும் சேர்த்து வதக்கி, டொமேடோ ப்யூரியையும் கலந்து, பொடியாக நறுக்கிய மல்லித்தழையையும் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
இந்தக் கலவை சற்று ஆறியதும், பாலக் இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து, அதனுள் இந்தக் கலவையை வைத்து ரோல் செய்யவும். பிறகு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சுருட்டி வைத்த 7 அல்லது 8 பாலக் பீஸ்களை வைத்து, பொன்னிறமாக மாறும் வரை திருப்பி புரட்டி எடுக்கவும்.
ஸ்டப்டு பாலக்: கார்ன்-க்கு பதிலாக ஸ்டஃப் செய்ய உருளைக்கிழங்கு போன்ற வேறு ஏதாவதுகூட வைக்கலாம். பாலக் கீரை இல்லையெனில் கோஸ் இதழ்களை உபயோகிக்கலாம்.
--------------------------------------------------------------
Post a Comment