சமையல் குறிப்புகள்! கோழி ரசம்
கோழி ரசம் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் விழுதாக்கியது - 200 கிராம் தக்காளி - 100 கிராம் கறிவேப்பிலை - 1 கொத்து மிளகுத் த...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_2926.html
கோழி ரசம்
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் விழுதாக்கியது - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - கோலியளவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை - 2
இலவங்கம் - 2
ஏலக்காய் - 2
செய்முறை
* சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
* கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், அரைத்த வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி இவை சேர்த்து ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
* மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து சிக்கனையும் வதக்கவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து சிக்கனை வேகவிடவும்.
* சிக்கன் வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும். பின்பு அதை வடிகட்டி சிக்கனை தனியாக எடுத்து விடவும்.
* பரிமாறும் பொழுது சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி ரசத்தில் போட்டுப் பரிமாற வேண்டும்
Post a Comment