சமையல் குறிப்புகள்! பலாச்சுளை எரிசேரி
பலாச்சுளை எரிசேரி தேவையானவை: வட்டமாக நறுக்கிய பலாச்சுளை - 4 கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_2838.html
பலாச்சுளை எரிசேரி
தேவையானவை: வட்டமாக நறுக்கிய பலாச்சுளை - 4 கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்.
அரைக்க: தேங்காய் துருவல் - ஒரு கப், நசுக்கிய மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: தேங்காயுடன் மிளகு, சீரகத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய பலாச்சுளையுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும், அரைத்த தேங்காய்க் கலவையை சேர்த்துக் கலந்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெயை விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பலாச்சுளை கலவையுடன் சேர்க்கவும்.
சுவையான கேரள பலாச்சுளை எரிசேரி ரெடி!
பலாச்சுளை எரிசேரி: பலாச்சுளையை வேக வைக்க மூன்றாம் தர தேங்காய்ப் பாலை பயன்படுத்தலாம். தேங்காய் துருவலுக்கு பதிலாக கெட்டியான தேங்காய்ப் பாலையே பயன்படுத்தினால் அற்புதமாக இருக்கும்.
Post a Comment