வாசகிகள் கைமணம்! வெஜிடபிள் ரோல்ஸ்

வெஜிடபிள் ரோல்ஸ் தேவையானவை: முட்டைகோஸ் & 250 கிராம், பச்சைப் பட்டாணி & 100 கிராம், கேரட் & 2, பீன்ஸ் & 20, மஞ்சள்தூள் &...

வெஜிடபிள் ரோல்ஸ் தேவையானவை: முட்டைகோஸ் & 250 கிராம், பச்சைப் பட்டாணி & 100 கிராம், கேரட் & 2, பீன்ஸ் & 20, மஞ்சள்தூள் & அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் & 2, பச்சை மிளகாய் & 4, எலுமிச்சம்பழம் & பாதி, உப்பு & சுவைக்கேற்ப, கடுகு, சீரகம் & தலா 1 டீஸ்பூன், மைதா மாவு & ஒன்றேகால் கப், எண்ணெய் & தேவையான அளவு, மல்லித்தழை & சிறிது. செய்முறை: காய்கறிகள் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, தண்ணீர்ப் பசை போகும்வரை புரட்டி எடுத்து, கீழே இறக்கவும். மல்லித்தழையையும் பொடியாக நறுக்கி தூவிக் கொள்ளவும். அடுத்து, மைதாமாவில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கலந்து, சிறிது உப்பையும் சேர்த்து தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல பிசையவும். பிசைந்ததை சிறிது எடுத்து அப்பளம்போல் பெரிதாக இட்டு, காய்கறிக் கலவையை பரவலாக வைத்து சுருட்டி, இரண்டு முனைகளையும் மாவால் மூடிவிடவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் சுருட்டியதைப் போட்டு, பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும். இதை ஒரு பிளேட்டில் வைத்து, கத்தியால் நான்காக வெட்டி அதன் மேல் தக்காளி சாஸோ, மிளகாய் சாஸோ போட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். விருந்தினர் வந்தால், உடனடியாகச் செய்யக் கூடிய சிற்றுண்டி இது. வெஜிடபிள் ரோல்ஸ்: விருப்பமுள்ளவர்கள், காய்கறிக் கலவையில் கால் டீஸ்பூன் அஜினோமோட்டோ சேர்த்து வதக்கி செய்யலாம். ஒரு குடமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். ----------------------------------------------------------------------------

Related

சமையல் குறிப்புகள் 9192507846773720905

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item