சமையல் குறிப்புகள்! இறால் பிரியாணி

இறால் பிரியாணி தேவையானப் பொருட்கள் * பெரிய இறால் - 3/4 கிலோ * பாஸ்மதி அரிசி - 4 டம்ளர் * வெங்காயம் - 4 * தக்காளி - 2 * பச்சை ...

இறால் பிரியாணி தேவையானப் பொருட்கள் * பெரிய இறால் - 3/4 கிலோ * பாஸ்மதி அரிசி - 4 டம்ளர் * வெங்காயம் - 4 * தக்காளி - 2 * பச்சை மிளகாய் - 2 * தயிர் - 2 தேக்கரண்டி * இஞ்சி, பூண்டு விழுது - 3 1/2 தேக்கரண்டி * மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி * மஞ்சள் தூள் - 2 1/2 தேக்கரண்டி * மிளகு தூள் - அரை தேக்கரண்டி * கரம் மசாலா தூள் - 3 தேக்கரண்டி * தக்காளி சாஸ் - அரை தேக்கரண்டி * பட்டை(விரல் அளவு) - 3 * கிராம்பு - 3 * ஏலக்காய் - 4 * எலுமிச்சை பழம் - ஒன்று * மல்லி, புதினா தழை - தலா அரை கட்டு * எண்ணெய் - 100 மி.லி * நெய் - 3 தேக்கரண்டி இறாலை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சாஸ் போட்டு நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும். வெங்காயம் தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு அகன்ற வாணலியில் 60 மி.லி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் இறாலை போட்டு தண்ணீர் சுண்ட வறுத்து வைக்கவும். வெங்காயம் தக்காளி வதங்கியதும், இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா தூள், மற்ற மசாலாதூள் வகைகள், தயிர், மல்லி, புதினா தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் வதங்க விடவும். பிறகு வறுத்து வைத்திருக்கும் இறாலை அதில் சேர்த்து பிரட்டி ஒரு நிமிடம் வைக்கவும். அதன் பிறகு எண்ணெய் மிதந்து வரும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும். அரிசியை நன்கு மூன்று முறை கழுவி விட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பெரிய சட்டியில் ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதி வந்ததும், ஊற வைத்த அரிசியில் தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு போட்டு அதற்கு தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும். எலுமிச்சைச்சாறை ஊற்றவும். தண்ணீர் சுண்டும் நேரம் மசாலாவை ஊற்றி அடி சாதத்தை மேலே மேலே போட்டு மீதியுள்ள கரம் மசாலாவை பரவலாக தூவி விரும்பினால் ஆரஞ்சு கலர் சிலதுளிகள் ஓரிடத்தில் போடவும். அடுப்பில் தம் போடும் தட்டை வைத்து மூடியில் பேப்பர் போட்டு மூடி மேலே வெயிட் வைத்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து 15 நிமிடம் அப்படியே விடவும். அதன் பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான இறால் பிரியாணி ரெடி. விரும்பினால் அரிந்த வெங்காயத்தில் ஒரு கைப்பிடியை எடுத்து வறுத்து பரிமாறும் நேரம் பிரியாணியின் மேல் தூவி பரிமாறலாம். இதற்கு ரைத்தா மட்டும் வைத்தாலே மிகவும் சுவையாக இருக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 5712986722473927426

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item