வாசகிகள் கைமணம்! டேட்ஸ் அண்ட் நட்ஸ் பால்போளி
டேட்ஸ் அண்ட் நட்ஸ் பால்போளி தேவையானவை: முந்திரிப்பருப்பு - அரை கப், பேரீச்சம்பழம் - அரை கப், மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப்...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_1575.html
டேட்ஸ் அண்ட் நட்ஸ் பால்போளி
தேவையானவை: முந்திரிப்பருப்பு - அரை கப், பேரீச்சம்பழம் - அரை கப், மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், பால் - ஒரு லிட்டர், ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, எண்ணெய் -- பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: முந்திரிப்பருப்பையும், பேரீச்சம்பழத்தையும் தனித்தனியாக பாலில் அரைமணி நேரம் ஊறவைக்கவும். பின் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதுகளை மைதாமாவு சேர்த்துப் பிசைய வேண்டும். பிசைந்த மாவை சிறுசிறு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, பாலை அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவும். சிறிது கெட்டியாக ஆனவுடன் சர்க்கரையை போட்டு கொதிக்கவிடவும். கொதித்ததும் கீழே இறக்கி குங்குமப்பூ, ஏலக்காய் பொடி சேர்க்கவும். பொரித்த பூரிகளை சூடான பாலில் ஒவ்வொன்றாக அமிழ்த்தி எடுத்து, அந்த பூரிகளின் மேல் கொஞ்சம் சர்க்கரையையும் ட்ரை ஃப்ரூட்ஸையும் தூவி அலங்கரிக்கவும்.
டேட்ஸ் அண்ட் நட்ஸ் பால்போளி: பாலை சிறிது குறைத்து, அதற்கு பதில் மில்க்மெய்ட் சேர்த்தால், ருசி இன்னும் அபாரம்!
---------------------------------------------------------------------------------
Post a Comment