வாசகிகள் கைமணம்! தயிர் பாதுஷா
தயிர் பாதுஷா தேவையானவை: மைதா மாவு - இரண்டரை கப், டால்டா - ஒரு கப், சர்க்கரை - இரண்டரை கப், சமையல்சோடா - ஒரு டீஸ்பூன், தயிர் - அரை கப், எண...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_1226.html
தயிர் பாதுஷா
தேவையானவை: மைதா மாவு - இரண்டரை கப், டால்டா - ஒரு கப், சர்க்கரை - இரண்டரை கப், சமையல்சோடா - ஒரு டீஸ்பூன், தயிர் - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு, அலங்கரிக்க செர்ரி - சிறிதளவு, வெந்நீர் - அரை டம்ளர்.
செய்முறை: முதலில் தயிர், டால்டா, சமையல்சோடா இம்மூன்றையும் மிக்ஸியில் ‘விப்’பரில் அடிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிக்ஸியை கொதிக்கும் நீர்விட்டு கழுவி, அந்த நீரையும் தயிர் கலவையில் விடவும். மைதா மாவை அதில் போட்டு நன்றாகப் பிசைந்து, சிறு சிறு பாதுஷாக்களாக செய்து, மிதமான தீயில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பிறகு சர்க்கரையை இரட்டை கம்பிப் பதத்தில் (சற்று கெட்டியான) பாகு வைத்து, பாதுஷாக்களை அதில் போட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து, மேலே செர்ரிப் பழங்களை வைத்து அலங்கரிக்கவும்.
தயிர் பாதுஷா: டால்டாவின் மணம் பிடிக்காதவர்கள் நெய் சேர்த்துச் செய்யலாம்.
Post a Comment