கொய்யா ஜூஸ்--பப்பட் கேன்பி--ராகி ஸ்டிக்ஸ் ஃபிரை
ராகி ஸ்டிக்ஸ் ஃபிரை தேவையான பொருட்கள்: ராகி சேமியா - 1/2 பாக்கெட், வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒன்று, கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_1096.html
ராகி ஸ்டிக்ஸ் ஃபிரை
தேவையான பொருட்கள்: ராகி சேமியா - 1/2 பாக்கெட், வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒன்று, கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் - 1/2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப
செய்முறை: ராகி ஸ்டிக்கை உப்பு கலந்த தண்ணீர் தெளித்து இட்லி பானையில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வேக வையுங்கள். எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாயைத் தாளியுங்கள். வதங்கிய பின்பு வேக வைத்த ராகி ஸ்டிக்கையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். சூடாக சாப்பிட்டால் படு டேஸ்ட்டாக இருக்கும்.
-------------------------------------------------------------
பப்பட் கேன்பி
தேவையான பொருட்கள்: தணலில் சுட்ட அப்பளம் (அ) கை்ரோ அவனில் சுட்டது தேவையான அளவு, வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒன்று, நறுக்கிய தக்காளி - ஒன்று, பன்னீர் துருவியது - 4 டீஸ்பூன், புதினா - ஒரு கையளவு.
செய்முறை: தேவையான பொருட்களுடன் உப்பு சேர்த்துக் கலந்து அதன் மேல் அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்.
--------------------------------------------------------------------------
கொய்யா ஜூஸ்
தேவையான பொருட்கள்: கொய்யப்பழம் - ஒன்று, சுகர் சிரப் - தேவையான அளவு, ரோஸ் கலர் - ஒரு சிட்டிகை, ஐஸ் க்யூப் - தேவையான அளவு.
செய்முறை: கொய்யாவின் தோலைச் சீவி விட்டு சின்ன துண்டுகளாகப் போட்டு ஜூஸ் ஆக்கவும். இத்துடன் ஐஸ் க்யூப், சுகர் சிரப் மற்றும் ரோஸ் கலர் சேர்க்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சில்லென்று பரிமாறவும்.
Post a Comment