சட்டு’னு செய்யலாம்.. 30 வகை புட்டு! சமையல் குறிப்பு

சட்டு’னு செய்யலாம்.. 30 வகை புட்டு! "புட்டு" மாவு வெந்ததுக்கு அடையாளமாக உருட்டிப் பார்த்தால் கயிறு போல் வரும். வேகாமல் இருந்தால் ...

சட்டு’னு செய்யலாம்.. 30 வகை புட்டு! "புட்டு" மாவு வெந்ததுக்கு அடையாளமாக உருட்டிப் பார்த்தால் கயிறு போல் வரும். வேகாமல் இருந்தால் மாவு உதிர்ந்து கொள்ளும். அதிகமாக தண்ணீர் ஊற்றிவிட்டால், கட்டிதட்டிவிடும். வேகும்போது இடையிடையே கிளறி விடவேண்டும்!’’ என்று சுவையான புட்டு செய்யும் முறைகளை புட்டுப் புட்டு வைத்து, இந்த செய்முறைகளை எழுதி அனுப்பி இருக்கிறார், பட்டுப் போன்ற மென்மை யுள்ள புட்டு வகைகள் உடலுக்கு சத்து ஊட்டு பவை. எளிதில் செரிக்கக் கூடியவை. செய்து, ருசி யுங்கள்! குறிப்பு: இட்லிப் பாத்திரம், குக்கர் போன்றவற்றிலேயே புட்டு செய்யலாம். அதிக சுவையை விரும்புகிறவர்கள், குழாப் புட்டு செய்வதற்கான குழாயி லும் செய்யலாம். இது எல்லா பாத்திரக் கடைகளிலும் கிடைக் கும். விலை 120 ரூபாய் முதல். --------------------------------------------------------------------------- பச்சரிசி மாவு புட்டு தேவையானவை: வறட்டு பச்சரிசி மாவு -- ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், பாதாம், முந்திரி - தலா 10, உப்பு - அரை டீஸ்பூன், பேரீச்சை துண்டுகள் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை: சூடான கடாயில் பச்சரிசி மாவை லேசாக வறுத்து ஆறவிடவும். இதனுடன், உப்பு கரைத்த நீர் தெளித்துப் பதமாகப் பிசிறி ஆவியில் வேகவிடவும். பாதி வெந்ததும், தேங்காய் துருவலைப் போட்டுக் கிளறி தேவையானால் நீர் தெளித்து மூடிவைத்து வேகவிடவும். வெந்து நல்ல வாசனை வந்ததும் இறக்கவும். கடாய் சூடானதும், ஒரு கை நீர் தெளித்து, சர்க்கரையைச் சேர்த்து இளக்கி, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கிளறி வெந்த மாவில் நன்றாகக் கலக்கவும். பாதாம், முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு, பேரீச்சை துண்டுகளால் அலங்கரிக்கவும். ________________________________________ பச்சரிசி மாவு வெல்லப் புட்டு தேவையானவை: வறட்டு பச்சரிசி மாவு -- ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் - அரை கப், பாதாம், முந்திரி - தலா 10. உப்பு - அரை டீஸ்பூன், பேரீச்சை துண்டுகள் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை: பச்சரிசி மாவு புட்டுக்கு செய்தது போல் செய்து வேகவிட்டதும் சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைக் கெட்டி பாகு வைத்து ஊற்றிக் கிளறி மற்ற பொருட்களைச் சேர்க்கவும். இந்த புட்டு, சூப்பர் சுவையாக இருக்கும். உடலுக்கு இரும்புச்சத்தையும் அளிக்கும். ________________________________________ கிராமத்துப் புட்டு தேவையானவை: பச்சரிசி - 4 கப், தேங்காய் துருவல் - 2 கப், வெல்லத்தூள் - 2 கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், முந்திரி, வேர்க்கடலை, உரித்த பரங்கிக்காய் விதை - தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை 4 மணிநேரம் ஊறவிட்டுக் கழுவி நீரை வடித்துவிட்டு ஈரமாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். மாவை நன்றாக சலித்து வெறும் கடாயில் பொன்னிறமாக வறுக்கவும். கொஞ்சமாக உப்பு கரைத்த நீரை ஆறிய மாவில் தெளித்து, புட்டுமாவு பிசிறி பத்து நிமிடம் மூடிவைக்கவும். பிறகு அதில் தேங்காய் துருவலைக் கலந்து ஆவியில் வேகவிடவும். இடையிடையே கிளறி, தேவையானால் நீர் தெளித்து மூடி வைக்கவும். வெந்ததும் இறக்கி வெல்லத்தைக் கெட்டிப்பாகு வைத்து உற்றிக் கிளறவும். நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரி, தோல் நீக்கி உடைத்த வேர்க்கடலை, பரங்கிக்காய் விதை ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொட்டவும். கமகம வாசனையில் கிராமத்துப் புட்டு ரெடி! ________________________________________ பல தானியப் புட்டு தேவையானவை: பச்சரிசி - அரை கப், சம்பா கோதுமைமாவு - கால் கப், சோயா - கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், பாசிப்பயிறு - கால் கப், சோளம் - கால் கப், ராஜ்மா - கால் கப், சர்க்கரை - ஒரு கப், தேங்காய் துருவல்- ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - கால் கப், முந்திரி - 10, உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: கடாய் சூடானதும் கோதுமை மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். மற்ற தானியங்களை எல்லாம் தனித் தனியே நன்றாக வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். தனித்தனியாக மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் பொடி செய்து சலிக்கவும் அல்லது எல்லாவற்றையும் வறுத்து மிஷினில் கொடுத்தும் அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவுக் கலவையுடன் கோதுமை மாவைச் சேர்த்து உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி வைத்துப் பின் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும். இந்த சத்தான புட்டு, சுவைமிக்கதும் கூட! ________________________________________ கவுனி அரிசிப் புட்டு தேவையானவை: கவுனி அரிசி - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், முந்திரி - 12, குங்குமப்பூ - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசியைக் கழுவி சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஒன்றுக்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊறவிடவும். மறுநாள் அந்த தண்ணீருடனே, அரிசியை பாத்திரத்தில் கொட்டி குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் 10 நிமிடம் அடுப்பை ‘சிம்’மில் வைத்து இறக்கவும். வெந்த அரிசியில் சிறிது நெய்விட்டுக் கிளறி குக்கரில் வைக்கவும். தண்ணீரில்லாமல் வெந்ததும் தேங்காய் துருவல், நெய், குங்குமப்பூ (பாலில் கரைத்தது), ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொஞ்சம் ‘சவ் சவ்’ என்றுதான் இருக்கும். உதிர் உதிராக ஆகாது. முந்திரியை நெய்யில் வறுத்துக் கொட்டவும். குறிப்பு: அரிசி வேகவில்லையெனில், திரும்பவும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2, 3 விசில் வந்ததும் இறக்கவும். அரிசியில் சர்க்கரை சேர்த்த பிறகு எவ்வளவு வேகவைத்தாலும் வேகாது. ________________________________________ குழாப் புட்டு தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், முந்திரி - 12, உப்பு - அரை டீஸ்பூன். செய்முறை: பச்சரிசி மாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுக்கவும். உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி 10 நிமிடம் வைக்கவும். புட்டுக்குழாயில் கொஞ்சம் புட்டுமாவை அடைத்து, அதன்மேல் ஒரு அடுக்காக தேங்காய், நாட்டுச் சர்க்கரை கலவையைத் தேவைக்கேற்ப அடைக்கவும். மற்றொரு அடுக்காக, மாவு, தேங்காய், நாட்டுச் சர்க்கரை கலவை, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடைத்து, குழாய்ப்புட்டு சட்டியில் தண்ணீர் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்துக் கொட்டவும். எல்லா மாவுகளிலும் இந்த குழாப் புட்டு தயாரிக்கலாம். ________________________________________ சோயா புட்டு தேவையானவை: சோயா மாவு - கால் கப், பச்சரிசி மாவு - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பாதாம், முந்திரி - தலா 10, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன். செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். சோயா மாவை சிறிது நெய்யில் பிசிறி, கடாய் காய்ந்ததும் போட்டு ஐந்து நிமிடம் வறுக்கவும். பச்சரிசி மாவை லேசாக வறுத்துக் கலக்கவும். பாதாமை வறுத்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். மாவுக் கலவையுடன் ஊறிய பாசிப்பருப்பையும், அரைத்த பாதாமையும் கலந்து, உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி பத்து நிமிடம் மூடி வைக்கவும். பிறகு ஆவியில் வேகவைத்து எடுக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு, சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். ________________________________________ கம்பு மாவு புட்டு தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - கால் கப், நாட்டுச் சர்க்கரை - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், முந்திரி - 10, உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: இரண்டு மாவுகளையும் தனித்தனியே, சூடான கடாயில், வாசனை வரும்வரை வறுத்து ஆறவிட்டுப் பிசிறவும். பத்து நிமிடம் கழித்து, ஆவியில் வேகவிட்டு மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கலக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துப் போடவும். உடலுக்கு தெம்பு ஊட்டும், இந்த கம்பு மாவு புட்டு! ________________________________________ கேழ்வரகு மாவு புட்டு தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - கால் கப், வெல்லத்தூள் - முக்கால் கப், தேங்காய் துருவல் - முக்கால் கப், வேர்க்கடலை, முந்திரி - தலா 8, நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: கடாய் காய்ந்ததும், மாவுகளைத் தனித்தனியே லேசான சூடு வர வறுக்கவும். உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக, ஆறிய மாவு கலவையில் தெளித்துப் புட்டு மாவு பதத்தில் கலக்கவும். அழுத்திவிட்டுத் துணியால் மூடி பத்து நிமிடம் வைக்கவும். பிறகு மாவுகளைக் கட்டியில்லாமல் உதிர்த்துப் பரப்பி ஆவியில் வேகவிடவும். வெல்லத்தூளைக் கரைத்து வடிகட்டி, கெட்டிப்பாகு செய்து தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூளை சேர்த்து வெந்தமாவில் சிறிது சிறிதாகப் போட்டுக் கலந்துவிடவும். நெய் ஊற்றிப் பிசறி கட்டியில்லாமல் உதிர்த்து வைக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றைத் தூவி அலங்கரிக்கவும். முளைகட்டி நிழலில் உலர்த்தி அரைத்து செய்யும் கேழ்வரகு மாவு புட்டு கூடுதல் சத்தானது. ________________________________________ சோள மாவு புட்டு தேவையானவை: சோளக்குருணை - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், தேங்காய் துருவல் - முக்கால் கப், வெல்லத்தூள் - முக்கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, முந்திரி - 8. செய்முறை: மக்காச்சோளத்தைக் காய வைத்துச் சற்றே கரகரவென நொய் போல் உடைக்கவும். அரிசி மாவையும் சோளக்குருணையையும் சூடான கடாயில் லேசாக வறுத்து கேழ்வரகு மாவு புட்டு போலவே தயாரிக்கவும். ________________________________________ கொள்ளு புட்டு தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கொள்ளு - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) முந்திரி - 5, பாதாம் - 4, எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தாளிக்க, கறிவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொள்ளை சுத்தப்படுத்தி வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். மிக்ஸியில் போட்டு கரகரப்பாகப் பொடிக்கவும். அரிசி மாவை சூடு வர வறுத்து, கொள்ளுடன் கலந்து, உப்பு கரைத்த நீர் விட்டுப் பிசிறி மூடிவைக்கவும். பத்து நிமிடத்துக்குப் பின் மஞ்சள்தூள் கலந்து வேக விடவும். வெந்த புட்டுடன் தேங்காய் துருவல், நெய், எலுமிச்சை சாறு கலந்து கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும். பாதாமை சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுத்துத் தூவவும். சுவையான புட்டு ரெடி. வேண்டுமானால் நெய், தேங்காய் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த கொள்ளு புட்டு உடல் பருமனை குறைக்க உதவும். ________________________________________ அவல் புட்டு தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், பால் - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 8, ஏலக்காய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: அவலுடன் சிறிது நெய் விட்டு பிசிறி, கடாய் காய்ந்ததும் இளம் பொன்னிறமாக வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு ரவையாக பொடிக்கவும். பால் தெளித்து தேவையானால் நீரும் தெளித்து உப்பு சேர்த்து புட்டுமாவு பிசறி ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். பிறகு ஆவியில் வேகவிடவும். சீக்கிரம் வெந்துவிடும். இறக்கி சூடாக இருக்கும்போதே சர்க்கரை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து உதிரியாகக் கலக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு அலங்கரிக்கவும். ________________________________________ சேமியா புட்டு தேவையானவை: நொறுக்கிய சேமியா - ஒரு கப், சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 8, ஏலக்காய்த்தூள், - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: மெல்லிய சேமியாதான் புட்டுக்கு ஏற்றது. சேமியாவில் நெய் விட்டுப் பிசறி காய்ந்த கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். ஆறியதும் உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி மூடி வைக்கவும். பத்து நிமிடம் வைத்திருந்து ஆவியில் வேகவிட்டு இறக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு, சூடாக இருக்கும்போதே தேங்காய், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். ________________________________________ பிரெட் புட்டு தேவையானவை: மிருதுவான இனிப்பு பிரெட் - 10 ஸ்லைஸ், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 8, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் கப். செய்முறை: பிரெட் ஓரங்களை வெட்டி நீக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நாலு சுற்று சுற்றி கரகரப்பாக தூளாக்கவும். நான்ஸ்டிக் பான் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி நீர் விட்டு சர்க்கரையைப் போடவும். இளகி பாகுபோல் வந்ததும், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி பிரெட் தூளைப் போட்டு இறக்கி, சிறிது நெய் விட்டுக் கிளறவும். பொலபொலப்பாக வரும்வரை கிளறி, நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவி அலங்கரிக்கவும். விருந்தாளியுடன் பேசிக்கொண்டே விரைவில் செய்துவிடலாம். ________________________________________ ரவை புட்டு தேவையானவை: பம்பாய் ரவை - ஒரு கப், சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 8, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: ரவையில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டுப் பிசிறி சூடான கடாயில் போட்டு கை பொறுக்கும் சூட்டில் வறுத்து இறக்கவும். உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து புட்டுமாவு பதத்தில் பிசிறவும். அழுத்திவிட்டு மூடி ஆவியில் வேகவிடவும். நன்றாக வெந்ததும், தட்டில் கொட்டி, கையில் நெய் தொட்டுக் கொண்டு கட்டியில்லாமல் உதிர்த்து சர்க்கரை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துத் தூவவும். குறிப்பு: கைப்பிடி பாசிப்பருப்பு வறுத்து ஊறவிட்டு ரவையுடன் கலந்து வேகவைத்து செய்தால் சுவையும், சத்தும் கூடுதலாகும். ________________________________________ பாசிப்பருப்பு புட்டு தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், வெல்லத்தூள் - முக்கால் கப், தேங்காய் துருவல் - முக்கால் கப், முந்திரி - 30 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், செய்முறை: பாசிப்பருப்பை லேசாக வறுத்து ஆறியதும் இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இட்லிக்கு உளுந்து அரைப்பது போல் நீர்சேர்த்துப் பொங்க அரைக்கவும். உப்பு சேர்த்து இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக விடவும். கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு இட்லிகளை நன்றாக உதிர்த்து வைக்கவும். அரை கப் நீரில் வெல்லம் போட்டுச் சூடாக்கி கரைந்ததும் வடிகட்டி, அடுப்பில் வைத்து கெட்டிப்பாகு செய்து உதிர்த்த பாசிப்பருப்பு இட்லியில் ஊற்றி நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி போட்டு அலங்கரிக்கவும். பத்து நிமிடத்தில் உதிர் உதிராகிவிடும். சுவை, மணத்துடன் புரோட்டீன், நார்ச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது. எல்லோருக்கும் ஏற்றது! கவுனி அரிசிப் புட்டு தேவையானவை: கவுனி அரிசி - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், முந்திரி - 12, குங்குமப்பூ - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசியைக் கழுவி சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஒன்றுக்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊறவிடவும். மறுநாள் அந்த தண்ணீருடனே, அரிசியை பாத்திரத்தில் கொட்டி குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் 10 நிமிடம் அடுப்பை ‘சிம்’மில் வைத்து இறக்கவும். வெந்த அரிசியில் சிறிது நெய்விட்டுக் கிளறி குக்கரில் வைக்கவும். தண்ணீரில்லாமல் வெந்ததும் தேங்காய் துருவல், நெய், குங்குமப்பூ (பாலில் கரைத்தது), ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொஞ்சம் ‘சவ் சவ்’ என்றுதான் இருக்கும். உதிர் உதிராக ஆகாது. முந்திரியை நெய்யில் வறுத்துக் கொட்டவும். குறிப்பு: அரிசி வேகவில்லையெனில், திரும்பவும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2, 3 விசில் வந்ததும் இறக்கவும். அரிசியில் சர்க்கரை சேர்த்த பிறகு எவ்வளவு வேகவைத்தாலும் வேகாது. ________________________________________ குழாப் புட்டு தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், முந்திரி - 12, உப்பு - அரை டீஸ்பூன். செய்முறை: பச்சரிசி மாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுக்கவும். உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி 10 நிமிடம் வைக்கவும். புட்டுக்குழாயில் கொஞ்சம் புட்டுமாவை அடைத்து, அதன்மேல் ஒரு அடுக்காக தேங்காய், நாட்டுச் சர்க்கரை கலவையைத் தேவைக்கேற்ப அடைக்கவும். மற்றொரு அடுக்காக, மாவு, தேங்காய், நாட்டுச் சர்க்கரை கலவை, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடைத்து, குழாய்ப்புட்டு சட்டியில் தண்ணீர் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்துக் கொட்டவும். எல்லா மாவுகளிலும் இந்த குழாப் புட்டு தயாரிக்கலாம். ________________________________________ சோயா புட்டு தேவையானவை: சோயா மாவு - கால் கப், பச்சரிசி மாவு - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பாதாம், முந்திரி - தலா 10, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன். செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். சோயா மாவை சிறிது நெய்யில் பிசிறி, கடாய் காய்ந்ததும் போட்டு ஐந்து நிமிடம் வறுக்கவும். பச்சரிசி மாவை லேசாக வறுத்துக் கலக்கவும். பாதாமை வறுத்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். மாவுக் கலவையுடன் ஊறிய பாசிப்பருப்பையும், அரைத்த பாதாமையும் கலந்து, உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி பத்து நிமிடம் மூடி வைக்கவும். பிறகு ஆவியில் வேகவைத்து எடுக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு, சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். கம்பு மாவு புட்டு தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - கால் கப், நாட்டுச் சர்க்கரை - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், முந்திரி - 10, உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: இரண்டு மாவுகளையும் தனித்தனியே, சூடான கடாயில், வாசனை வரும்வரை வறுத்து ஆறவிட்டுப் பிசிறவும். பத்து நிமிடம் கழித்து, ஆவியில் வேகவிட்டு மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கலக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துப் போடவும். உடலுக்கு தெம்பு ஊட்டும், இந்த கம்பு மாவு புட்டு! ________________________________________ கேழ்வரகு மாவு புட்டு தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - கால் கப், வெல்லத்தூள் - முக்கால் கப், தேங்காய் துருவல் - முக்கால் கப், வேர்க்கடலை, முந்திரி - தலா 8, நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: கடாய் காய்ந்ததும், மாவுகளைத் தனித்தனியே லேசான சூடு வர வறுக்கவும். உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக, ஆறிய மாவு கலவையில் தெளித்துப் புட்டு மாவு பதத்தில் கலக்கவும். அழுத்திவிட்டுத் துணியால் மூடி பத்து நிமிடம் வைக்கவும். பிறகு மாவுகளைக் கட்டியில்லாமல் உதிர்த்துப் பரப்பி ஆவியில் வேகவிடவும். வெல்லத்தூளைக் கரைத்து வடிகட்டி, கெட்டிப்பாகு செய்து தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூளை சேர்த்து வெந்தமாவில் சிறிது சிறிதாகப் போட்டுக் கலந்துவிடவும். நெய் ஊற்றிப் பிசறி கட்டியில்லாமல் உதிர்த்து வைக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றைத் தூவி அலங்கரிக்கவும். முளைகட்டி நிழலில் உலர்த்தி அரைத்து செய்யும் கேழ்வரகு மாவு புட்டு கூடுதல் சத்தானது. ________________________________________ சோள மாவு புட்டு தேவையானவை: சோளக்குருணை - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், தேங்காய் துருவல் - முக்கால் கப், வெல்லத்தூள் - முக்கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, முந்திரி - 8. செய்முறை: மக்காச்சோளத்தைக் காய வைத்துச் சற்றே கரகரவென நொய் போல் உடைக்கவும். அரிசி மாவையும் சோளக்குருணையையும் சூடான கடாயில் லேசாக வறுத்து கேழ்வரகு மாவு புட்டு போலவே தயாரிக்கவும். ________________________________________ கொள்ளு புட்டு தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கொள்ளு - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) முந்திரி - 5, பாதாம் - 4, எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தாளிக்க, கறிவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொள்ளை சுத்தப்படுத்தி வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். மிக்ஸியில் போட்டு கரகரப்பாகப் பொடிக்கவும். அரிசி மாவை சூடு வர வறுத்து, கொள்ளுடன் கலந்து, உப்பு கரைத்த நீர் விட்டுப் பிசிறி மூடிவைக்கவும். பத்து நிமிடத்துக்குப் பின் மஞ்சள்தூள் கலந்து வேக விடவும். வெந்த புட்டுடன் தேங்காய் துருவல், நெய், எலுமிச்சை சாறு கலந்து கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும். பாதாமை சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுத்துத் தூவவும். சுவையான புட்டு ரெடி. வேண்டுமானால் நெய், தேங்காய் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த கொள்ளு புட்டு உடல் பருமனை குறைக்க உதவும். ________________________________________ அவல் புட்டு தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், பால் - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 8, ஏலக்காய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: அவலுடன் சிறிது நெய் விட்டு பிசிறி, கடாய் காய்ந்ததும் இளம் பொன்னிறமாக வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு ரவையாக பொடிக்கவும். பால் தெளித்து தேவையானால் நீரும் தெளித்து உப்பு சேர்த்து புட்டுமாவு பிசறி ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். பிறகு ஆவியில் வேகவிடவும். சீக்கிரம் வெந்துவிடும். இறக்கி சூடாக இருக்கும்போதே சர்க்கரை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து உதிரியாகக் கலக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு அலங்கரிக்கவும். ________________________________________ சேமியா புட்டு தேவையானவை: நொறுக்கிய சேமியா - ஒரு கப், சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 8, ஏலக்காய்த்தூள், - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: மெல்லிய சேமியாதான் புட்டுக்கு ஏற்றது. சேமியாவில் நெய் விட்டுப் பிசறி காய்ந்த கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். ஆறியதும் உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி மூடி வைக்கவும். பத்து நிமிடம் வைத்திருந்து ஆவியில் வேகவிட்டு இறக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு, சூடாக இருக்கும்போதே தேங்காய், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். ________________________________________ பிரெட் புட்டு தேவையானவை: மிருதுவான இனிப்பு பிரெட் - 10 ஸ்லைஸ், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 8, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் கப். செய்முறை: பிரெட் ஓரங்களை வெட்டி நீக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நாலு சுற்று சுற்றி கரகரப்பாக தூளாக்கவும். நான்ஸ்டிக் பான் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி நீர் விட்டு சர்க்கரையைப் போடவும். இளகி பாகுபோல் வந்ததும், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி பிரெட் தூளைப் போட்டு இறக்கி, சிறிது நெய் விட்டுக் கிளறவும். பொலபொலப்பாக வரும்வரை கிளறி, நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவி அலங்கரிக்கவும். விருந்தாளியுடன் பேசிக்கொண்டே விரைவில் செய்துவிடலாம். ________________________________________ ரவை புட்டு தேவையானவை: பம்பாய் ரவை - ஒரு கப், சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 8, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: ரவையில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டுப் பிசிறி சூடான கடாயில் போட்டு கை பொறுக்கும் சூட்டில் வறுத்து இறக்கவும். உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து புட்டுமாவு பதத்தில் பிசிறவும். அழுத்திவிட்டு மூடி ஆவியில் வேகவிடவும். நன்றாக வெந்ததும், தட்டில் கொட்டி, கையில் நெய் தொட்டுக் கொண்டு கட்டியில்லாமல் உதிர்த்து சர்க்கரை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துத் தூவவும். குறிப்பு: கைப்பிடி பாசிப்பருப்பு வறுத்து ஊறவிட்டு ரவையுடன் கலந்து வேகவைத்து செய்தால் சுவையும், சத்தும் கூடுதலாகும். ________________________________________ பாசிப்பருப்பு புட்டு தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், வெல்லத்தூள் - முக்கால் கப், தேங்காய் துருவல் - முக்கால் கப், முந்திரி - 30 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், செய்முறை: பாசிப்பருப்பை லேசாக வறுத்து ஆறியதும் இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இட்லிக்கு உளுந்து அரைப்பது போல் நீர்சேர்த்துப் பொங்க அரைக்கவும். உப்பு சேர்த்து இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக விடவும். கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு இட்லிகளை நன்றாக உதிர்த்து வைக்கவும். அரை கப் நீரில் வெல்லம் போட்டுச் சூடாக்கி கரைந்ததும் வடிகட்டி, அடுப்பில் வைத்து கெட்டிப்பாகு செய்து உதிர்த்த பாசிப்பருப்பு இட்லியில் ஊற்றி நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி போட்டு அலங்கரிக்கவும். பத்து நிமிடத்தில் உதிர் உதிராகிவிடும். சுவை, மணத்துடன் புரோட்டீன், நார்ச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது. எல்லோருக்கும் ஏற்றது!

Related

சமையல் குறிப்புகள் 6671781999968025437

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item