கோடையை கொண்டாட.. 30 வகை ஜூஸ், சாலட், ஐஸ்கிரீம்!

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக, 'ஜில்' என்று 30 வகை ஜூஸ், சாலட், ஐஸ்கிரீம், ஸ்குவாஷ்.. என கூல் அயிட்டங்களைத் தந்திருக்கிறார் சமையல் தில...

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக, 'ஜில்' என்று 30 வகை ஜூஸ், சாலட், ஐஸ்கிரீம், ஸ்குவாஷ்.. என கூல் அயிட்டங்களைத் தந்திருக்கிறார் சமையல் திலகம். இதற்கு மேலும் சம்மரை கூலாக்க சொல்லித் தரணுமா என்ன? குடும்பத்தோடு குஷியாக கொண்டாடுங்கள் கோடையை! ------------------------------------------------------------------------------- தக்காளி வெள்ளரி ஜூஸ் தேவையானவை: பழுத்த தக்காளி - 2, சிறிய வெள்ளரிக்காய் - 1, செல்லரி கீரை தண்டு - 1 சிறிய துண்டு, புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய புதினா, உப்பு - சிறிதளவு. செய்முறை: தக்காளி, வெள்ளரிக்காய், கீரை தண்டு, தயிர், சர்க்கரை, மிளகுத்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும். இதை வடிகட்டி மேலே புதினா தூவி, குளிர வைத்து பரிமாறவும். ________________________________________ பூண்டு மோர் தேவையானவை: தயிர் - அரை கப், பெரிய பூண்டு - ஒரு பல், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, குளிர்ந்த தண்ணீர் - 2 கப். செய்முறை: தயிர், பூண்டு, சீரகத்தூள் மற்றும் உப்பை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். அதில் குளிர்ந்த தண்ணீரை சேர்த்து அடித்து வடிகட்டி பரிமாறவும். வாசனை தூக்கலாக இருக்கும் இந்தப் பூண்டு மோரை, அரபு நாட்டு மக்கள் தினமும் விரும்பி சாப்பிடுவர். ---------------------------------------------------------------------- கேரட் தர்பூசணி ஜூஸ் தேவையானவை: பொடியாக நறுக்கிய தர்பூசணி - 2 கப், நறுக்கிய கேரட் - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பப்பட்டால் மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு வடிகட்டி குளிர வைத்து பரிமாறவும். ________________________________________ இஞ்சி சத்து மோர் தேவையானவை: புழுங்கலரிசி வடித்த கஞ்சி தண்ணீர் - 2 கப், லேசாக புளித்த மோர் - அரை கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சிறிய பச்சைமிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: தயிருடன் இஞ்சி, பச்சைமிளகாய் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வடித்த கஞ்சியை சேர்த்து அரைத்து, வடிகட்டவும். பிறகு குளிர வைத்து பரிமாறவும். ________________________________________ லெமன் ஜிஞ்சர் கூலர் தேவையானவை: எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சிச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ருசிக்கேற்ப, உப்பு - ஒரு சிட்டிகை, புதினா (அ) துளசி இலை - சிறிதளவு. செய்முறை: இஞ்சிச் சாறை 5 (அ) 10 நிமிடம் வைத்து தெளிந்ததும் மேலாக எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை, 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து குளிர வைத்து பரிமாறவும். ________________________________________ ஆரஞ்சு ஸ்குவாஷ் தேவையானவை: கமலா ஆரஞ்சுச் சாறு - ஒரு கப், சர்க்கரை - 2 கப், தண்ணீர் - ஒரு கப், பொட்டாசியம் மெட்டா பை சல்ஃபேட் (கே.எம்.எஸ்) - ஒரு சிட்டிகை, ஆரஞ்சு எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு கலர் (அ) கேசரி கலர் - ஒரு சிட்டிகை, சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன். செய்முறை: கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அதில் கே.எம்.எஸ் கலந்து தனியே வைக்கவும். சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர், சிட்ரிக் ஆசிட் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை நன்கு கரைந்து கொதித்ததும் வடிகட்டி, குளிர வைக்கவும். சர்க்கரை தண்ணீர் நன்றாக குளிர்ந்ததும் அதில் ஆரஞ்சுச் சாறு, கலர், கே.எம்.எஸ். கலந்த தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு அதில் எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்த பாட்டிலில் நிரப்பவும். கால் பங்கு ஜூஸூக்கு முக்கால் பங்கு தண்ணீர் (அ) சோடா சேர்த்து பரிமாறவும். ________________________________________ பாதாம் சுக்கு பால் தேவையானவை: நன்றாகக் காய்ச்சி குளிர வைத்த பால் - 2 கப், ஊறவைத்து, தோலுரித்து அரைத்த பாதாம் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பாதாம் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - தேவைக்கேற்ப, சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை. செய்முறை: பாலுடன் பாதாம் விழுது, பொடியாக நறுக்கிய பாதாம், குங்குமப்பூ, சுக்குப்பொடி, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை குளிர வைத்து ஜில்லென்று பரிமாறவும். ________________________________________ வெள்ளரி வெங்காய மோர் தேவையானவை: மோர் - 2 கப், துருவிய வெள்ளரி - அரை கப், சின்ன வெங்காயம் - 2 முதல் 3, உப்பு - தேவையான அளவு, விருப்பப்பட்டால் கறிவேப்பிலை (அ) கொத்தமல்லி - சிறிதளவு. செய்முறை: வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். வெள்ளரி, வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை (அ) கொத்தமல்லியை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் மோரை கலந்து ஒரு நிமிடம் மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். குளிர வைத்துப் பரிமாறவும். ________________________________________ ஜாய்ஃபுல் சாலட் தேவையானவை: மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய கோஸ், லெட்யூஸ் (முட்டை கோஸ் போல இருக்கும்), கேரட், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற குடமிளகாய், வெள்ளரிக்காய், விருப்பப்பட்டால் தக்காளி - 2 கப், வினிகர் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன். செய்முறை: நறுக்கிய காய்கறி கலவையுடன் வினிகர், சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு குளிர வைத்து பரிமாறவும். கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த சாலடை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ________________________________________ ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் தேவையானவை: பால் - ஒரு லிட்டர், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஜி.எம்.எஸ் - ஒரு டீஸ்பூன், ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் - அரை டீஸ்பூன், ஜெலட்டின் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெரி - அரை கப், ஸ்ட்ராபெரி எசென்ஸ் - ஒன்றரை டீஸ்பூன், ரோஸ் கலர் - ஒரு சிட்டிகை. செய்முறை: பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் அரை கப் பாலை மட்டும் தனியாக எடுத்து ஆற விட்டு, இதில் ஜி.எம்.எஸ்-ஐக் கலக்கவும். மீதியுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து, மீண்டும் காய்ச்சி ஆற விடவும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் கலந்து வைக்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு கரைய விடவும். சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆற வைத்த பாலுடன் இந்த இரண்டையும் கலக்கவும். இதில் ஃப்ரெஷ் கிரீம், எசென்ஸ், கலரை சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளை போட்டு, அதில் எல்லா பால் கலவைகளையும் விட்டு, ஹேண்ட் மிக்ஸரால் கெட்டியாக அடித்துக் கொள்ளவும். இதை சிறிய கப்புகளில் நிரப்பும்போது ஸ்ட்ராபெரி துண்டுகளை சேர்த்து பிறகு ஃப்ரீசரில் வைத்துப் பரிமாறவும். ________________________________________ ப்ரூட்டி வெஜ் சாலட் தேவையானவை: பழக்கலவை - 2 கப், நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், குடமிளகாய், கோஸ் - 2 கப், ஒன்றிரண்டாக உடைத்த பாதாம், அக்ரூட் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை (அ) தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: மேலே உள்ள அனைத்தையும் நன்றாகக் கலக்கவும். அதைக் குளிர வைத்து பரிமாறவும். ________________________________________ சாக்லெட் ஐஸ்கிரீம் தேவையானவை: பால் - ஒரு லிட்டர், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஜி.எம்.எஸ் (கிளிசரின் மோனோ ஸ்டீரியேட்) - ஒரு டீஸ்பூன், ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் - அரை டீஸ்பூன், கோகோ பவுடர் - 3 டீஸ்பூன், ஜெலட்டின் - ஒரு டீஸ்பூன். செய்முறை: பாலை நன்றாகக் காய்ச்சவும். அதில் அரை கப் பாலை தனியாக எடுத்து ஆற வைக்கவும். மீதியுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சி ஆற வைக்கவும். தனியாக ஆறவைத்த பாலில் பாதியை (அதாவது கால் கப்) எடுத்து, அதில் ஜி.எம்-எஸ்ஸை கலக்கவும். இன்னொரு கால் கப் பாலில் கோகோ பவுடரை கலக்கவும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரை கலக்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு கரைய விடவும். இப்போது, சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆறவைத்துள்ள பாலை எடுத்து, அதில் இந்த இரண்டையும் சேர்க்கவும். கடைசியில் இதனுடன் ஃப்ரெஷ் கிரீமை சேர்க்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதில் எல்லா பால் கலவைகளையும் ஒன்றாக சேர்த்து ஹேண்ட் மிக்ஸரால் நன்றாக அடிக்கவும். இதை சிறிய கப்களில் நிரப்பி ஃப்ரீசரில் வைத்தால் சாக்லெட் ஐஸ்கிரீம் தயார்! ________________________________________ டொமேட்டோ ஆரஞ்சு கூலர் தேவையானவை: நன்றாக பழுத்த தக்காளி - 2, கமலா ஆரஞ்சு - 2, குளுக்கோஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு - சிட்டிகை. செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆரஞ்சுச் சாறை பிழிந்து தக்காளி சாறுடன் சேர்த்து கலக்கவும். அதில் குளுக்கோஸ், உப்பு கலந்து குளிர வைத்து பரிமாறவும். குளுக்கோஸ் விரும்பாதவர்கள் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். ________________________________________ மேங்கோ ஐஸ்கிரீம் தேவையானவை: பால் - ஒரு லிட்டர், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஜி.எம்.எஸ் - ஒரு டீஸ்பூன், ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் - அரை டீஸ்பூன், ஜெல-ட்டின் - ஒரு டீஸ்பூன், மாம்பழ விழுது - அரை கப், பொடியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் - அரை கப், (விருப்பப்பட்டால்) மாம்பழ எசென்ஸ் - 2 டீஸ்பூன். செய்முறை: பாலை நன்றாகக் காய்ச்சவும். அதில் அரை கப் பாலை மட்டும் தனியாக எடுத்து ஆற வைத்து, அதில் ஜி.எம்.எஸ்-ஐக் கலந்து கொள்ளவும். மீதியுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சி ஆற வைக்கவும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரை கலக்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கரைத்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆறவைத்த பாலுடன் இவை இரண்டையும் கலந்து, கடைசியில் ஃப்ரெஷ் கிரீம், எசென்ஸ் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அதில் பால் கலவை, மாம்பழ விழுதைச் சேர்த்து, ஹேண்ட் மிக்ஸரால் கெட்டியாக அடிக்கவும். அதை சிறிய கப்களில் நிரப்பும்போது மாம்பழ துண்டுகளை சேர்த்து ஃப்ரீசரில் வைத்தால் சுவை நிறைந்த மேங்கோ ஐஸ்கிரீம் தயார்! ________________________________________ குளு குளு பப்பாளி தேவையானவை: நன்கு பழுத்த பப்பாளி பழ துண்டுகள் - ஒரு கப், ஆரஞ்சு - 1, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - தேவை-யான அளவு, புதினா (அ) துளசி - சிறிதளவு, மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து ஜூஸ் எடுக்கவும். அதில் எலுமிச்-சைச் சாறு, உப்பு, சர்க்கரை, பப்பாளி பழ துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மிளகுத்தூள், புதினா தூவி, குளிர வைத்து பரிமாறவும். ________________________________________ வெஜ் நட்டி சாலட் தேவையானவை: கேரட், வெள்ளரிக்காய், லெட்யூஸ் - தலா 1, முட்டைகோஸ் - 100 கிராம், தக்காளி - 2, வெங்-காயம் - 1, வறுத்த வேர்க்-கடலை - அரை கப், வறுத்த எள்ளு, வினிகர், தேன் - தலா ஒரு டேபிள்ஸ்-பூன், உப்பு - தேவையான அளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன். செய்முறை: காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வேர்க்-கடலை, எள்ளு தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். பரிமாறும்போது வேர்க்-கடலை மற்றும் எள்ளை சேர்க்கவும். ---------------------------------------------------------------- மேக்ரோனி க்ரீமி சாலட் தேவையானவை: மேக்ரோனி - ஒரு கப், மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை நிற குடமிளகாய் - தலா பாதி கப், பால் - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - அரை கப், கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மேக்ரோனியை நன்றாக வேக வைத்து, தண்ணீரை வடித்து, குளிர்ந்த நீரில் அலசவும். குடமிளகாய்களை சதுர துண்டுகளாக நறுக்கவும். வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டை நசுக்கிப் போடவும். இதில் நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். கார்ன்ஃப்ளாரை பாலில் கரைத்து இதில் சேர்க்கவும். கலவை நன்றாக கொதித்து வரும்போது அதில் வெந்த மேக்ரோனி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி இறக்கவும். லேசாக ஆறியதும் ஃப்ரெஷ் கிரீமை சேர்த்து பரிமாறவும். கேப்சிகம் கார்ன் டிலைட் தேவையானவை: பச்சை, மஞ்சள், சிவப்பு நிற குடமிளகாய் - தலா 1, வேக வைத்து உதிர்த்த சோளம் - ஒரு கப், புளிக்காத தயிர் - ஒரு கப், பூண்டு - 2 பல், பச்சைமிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு. செய்முறை: குடமிளகாய்களின் விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை விதை நீக்கி, பொடியாக நறுக்கவும். பூண்டை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும். தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி தொங்க விடவும். தயிரில் இருந்து தண்ணீர் வடிந்ததும் அதை நன்றாகக் கடையவும். அதில் குடமிளகாய், சோளம், பச்சைமிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். குளிர வைத்து பரிமாறவும். ________________________________________ பட்டர் ஸ்காட்ச் தேவையானவை: பால் - ஒரு லிட்டர், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஜி.எம்.எஸ் - ஒரு டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர் - அரை டீஸ்பூன், ஜெலட்டின் - ஒரு டீஸ்பூன். பட்டர் ஸ்காட்ச் செய்ய: பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி - தலா 10, சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: பாலை நன்றாகக் காய்ச்சவும். அதில் அரை கப் பாலை மட்டும் தனியாக எடுத்து ஆற வைத்து, ஜி.எம்-.-எஸ்-ஸை கலந்து கொள்ளவும். மீதியுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சி ஆற விடவும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரை கலக்கவும். ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கரைத்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்து காய்ச்சிய பாலில் இவற்றைச் சேர்த்து கலக்கவும். அதில் ஃப்ரெஷ் க்ரீம், எசென்ஸ் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதில் பால் கலவைகளை சேர்த்து ஹேண்ட் மிக்ஸரால் கெட்டியாக அடிக்கவும். இதை சிறிய கப்களில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும். சர்க்கரை மற்றும் பருப்புகளை ஒன்றாக சேர்த்து குறைந்த தீயில் நன்றாக வறுக்கவும். பருப்பு வறுபட்டு பொன்னிறமாக மாறும்போது இறக்கி ஆற வைத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இந்தப் பொடியைத் தூவி ஐஸ்கிரீமை பரிமாறவும். ________________________________________ ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் தேவையானவை: திராட்சை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா மற்றும் பப்பாளி பழ கலவை - 2 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - 2 கப். செய்முறை: பழக்கலவையுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து குளிர வைக்கவும். இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியை மேலே தூவியும் பரிமாறலாம். ________________________________________ டொமேட்டோ கப் சாலட் தேவையானவை: சிறிய, பழுத்த தக்காளி - 10, சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு. ஸ்டஃப்பிங் செய்ய: துருவிய பனீர் - கால் கப், பொடியாக நறுக்கிய வெள்ளரி - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) வேக வைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன், மிகவும் பொடியாக நறுக்கிய குடமிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஸ்டஃப்பிங் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தக்காளியின் மேல் பகுதியை வட்டமாகக் கீறி, தனியாக எடுத்து வைக்கவும். விதை பகுதியை கூர்மையான கத்தியால் உள்புறம் சுற்றிலும் கீறி எடுத்து விடவும் (எடுத்ததை சாம்பார், ரசம் செய்ய பயன்படுத்தலாம்). தக்காளியின் அடிப்பகுதியில் ஓட்டை விழாத வகையில் கவனமாக நறுக்கவும். தக்காளியினுள் சிறிது உப்பு தடவி கவிழ்த்து வைத்தால், தக்காளியின் உள்ளே இருக்கும் அதிகப்படியான நீர் வெளியேறி விடும். பிறகு தக்காளியினுள் சாட் மசாலாவை தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஸ்டஃப்பிங் செய்ய கலந்து வைத்துள்ள பொருட்களை நிரப்பவும். குளிர வைத்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் வினிகர் மற்றும் சர்க்கரையை தலா ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம். ________________________________________ பப்பாளி புளி சாலட் தேவையானவை: பப்பாளி பழ துண்டுகள் - 2 கப், புளிச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு. செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். குளிர வைத்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். ________________________________________ ரிச் ரைஸ் வெஜ் சாலட் தேவையானவை: வடித்த பாஸ்மதி சாதம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், வேக வைத்து உதிர்த்த சோளம் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப், வினிகர் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உதிர்த்த சாதத்துடன் நறுக்கிய வெள்ளரிக்காய், வேக வைத்து உதிர்த்த சோளம், நறுக்கிய குடமிளகாய், வினிகர், சர்க்கரை, மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கிளறவும். குளிர வைத்து பரிமாறவும். ________________________________________ ஃப்ரூட்ஸ் அண்ட் சேமியா கஸ்டர்ட் தேவையானவை: பால் - 2 கப், கஸ்டர்ட் பவுடர் - 3 டீஸ்பூன், சேமியா - கால் கப், சர்க்கரை, நட்ஸ் - தேவைக்கேற்ப, பழக்கலவை - ஒரு கப். செய்முறை: சேமியாவை லேசாக வறுத்து வேக விடவும். வெந்த சேமியாவில் அதிகப்படியான தன்ணீர் இருந்தால் வடித்து விடவும். ஒரு டம்ளர் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். மீதமுள்ள பாலில் கஸ்டர்ட் பவுடர், சர்க்கரையை கரைக்கவும். பால் பொங்கி வரும்போது, கஸ்டர்ட் பவுடர் கரைசலை அதில் ஊற்றி, குறைந்த தீயில் கிளறவும். பிறகு வெந்த சேமியாவை சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் பழங்களைச் சேர்த்து குளிர வைத்து பரிமாறவும். விருப்பப்பட்டால் நட்ஸ் வகைகளையும் சேர்க்கலாம். ________________________________________ லெமன் பார்லி தேவையானவை: எலுமிச்சை ஜூஸ் - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், தண்ணீர் - ஒரு கப், பார்லி பவுடர் - ஒரு டீஸ்பூன், லெமன் எசென்ஸ் - அரை டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை, கே.எம்.எஸ் - ஒரு சிட்டிகை. செய்முறை: எலுமிச்சை ஜூஸை பிழிந்ததுமே அதில் அரை டீஸ்பூன் சர்க்கரை கலந்து வைத்துக் கொண்டால், ஜூஸில் கசப்பு ஏறாது. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும். இதில் கால் கப் தண்ணீரில் கரைத்த பார்லி பவுடரை சேர்க்கவும். வெந்ததும், இதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். இறக்கி வைத்து ஆற விடவும். இதில் எலுமிச்சை ஜூஸ், எசென்ஸ், கலர், கே.எம்.எஸ் கலந்து பாட்டிலில் நிரப்பவும். இது 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதில் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அப்படியே குடிக்கலாம். ________________________________________ கேரட் சர்ப்ரைஸ் தேவையானவை: பால் - ஒரு லிட்டர், கேரட் - 2, கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், சர்க்கரை - தேவைக்கேற்ப, பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை, மெல்லியதாக நறுக்கிய பிஸ்தா - சிறிதளவு, ஏலக்காய் - கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 6, வெள்ளரி விதை - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: கேரட்டை துருவி, அரைத்துக் கொள்ளவும். அதனுடன் முந்திரி, பாதாம், வெள்ளரி விதை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து, முக்கால் பதம் காய்ந்ததும், அரைத்த விழுதைச் சேர்க்கவும். குறைந்த தீயில் அவ்வப்போது கிளறி விட்டு கொதிக்க விடவும். இதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து இரண்டு முறை கிளறவும். இதில் பச்சை கற்பூரம், ஏலக்காய் சேர்த்து இறக்கவும். பிஸ்தா பருப்பை தூவி ஆற வைக்-கவும். குளிர வைத்து பரிமாறவும். ________________________________________ ஃபைவ் இன் ஒன் ஜூஸ் தேவையானவை: ஆரஞ்சு ஜூஸ், தர்பூசணி ஜூஸ், கேரட் ஜூஸ், பப்பாளி ஜூஸ் - தலா ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் - கால் கப், சர்க்கரை - தேவைக்கேற்ப, உப்பு - ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: எல்லா ஜூஸை-யும் ஒன்றாக ஊற்றி சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்து கொள்ளவும். விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய ஆப்பிள், புதினாவை மேலே தூவி குளிர வைத்து பரிமாற-வும். ________________________________________ கல்ஃப் சாலட் தேவையானவை: பொடியாக உடைத்த கோதுமை ரவை - அரை கப், பொடியாக நறுக்கிய செல்லரி கீரை (சாலட் கீரை) - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, வெங்காயம், தக்காளி - தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, ஊற வைக்கவும். ஊறியதும், தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் செல்லரி கீரை, எலுமிச்சைச் சாறு, புதினா, வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். குளிர வைத்து பரிமாறவும். ________________________________________ மின்ட் ஸ்குவாஷ் தேவையானவை: புதினா இலைகள் - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், தண்ணீர் ஒரு கப், விருப்பப்பட்டால் பச்சை கலர் - ஒரு சிட்டிகை, சிட்ரிக் ஆசிட் - முக்கால் டீஸ்பூன், கே.எம்.எஸ். - ஒரு சிட்டிகை. செய்முறை: சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், தண்ணீர் மூன்றையும் கலந்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் புதினாவை (முன்பே நறுக்கி வைத்தால் நிறம் மாறிவிடும்) பொடியாக நறுக்கி சேர்த்து, உடனே இறக்கி மூடி வைக்கவும். நன்றாக ஆறியதும் ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பச்சை கலரை சேர்க்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் கே.எம்.எஸ் கலந்து சேர்க்கவும். பாட்டிலில் ஊற்றி வைக்கவும். தேவையானபோது ஒரு பங்கு ஜூஸூடன் 3 பங்கு தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம். ________________________________________ மாதுளை - கார்ன் ரெய்தா தேவையானவை: புளிக்காத தயிர் - ஒரு கப், மாதுளை முத்துக்கள், வேக வைத்து உதிர்த்த சோள மணிகள், வேக வைத்த பட்டாணி - தலா கால் கப், (விருப்பப்பட்டால்) பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், விருப்பப்பட்டால் பூண்டு - ஒரு பல், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பூண்டை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும். தயிரை லேசாகக் கடைந்து கொள்ளவும். தயிருடன் மாதுளை முத்துக்கள், சோள மணிகள், வேகவைத்த பட்டாணி, நறுக்கிய வாழைத்தண்டு, நறுக்கிய கொத்தமல்லி, சீரகத்தூள் , உப்பு மற்றும் நசுக்கிய பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். குளிர வைத்துப் பரிமாறவும். --------------------------------------------------------------------------

Related

30 நாள் 30 வகை சமையல் 3620889299855138328

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item