10 விதமான ஓட்ஸ் உணவுகள்!

10 விதமான ஓட்ஸ் உணவுகள்! ஓட்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனர்ஜியாக இருக்கிறது. ஆரோக்கிய உணவுகளின் பட்டியலில் உன்னதமான இடத்தைப் பிடித்து மக...

10 விதமான ஓட்ஸ் உணவுகள்! ஓட்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனர்ஜியாக இருக்கிறது. ஆரோக்கிய உணவுகளின் பட்டியலில் உன்னதமான இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் சீக்ரெட் ஆஃப் எனர்ஜியாக நிற்கிறது. அதற்குக் காரணமே ஓட்ஸால் செய்யப்படும் உணவுகள் சத்தாகவும் சுவையாகவும் இருப்பதுதான். அதுவும் டயாபடீஸ்காரர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக விளங்குவதோடு, நம் உடம்பிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி ஆரோக்கியத்தோடு வாழவைக்கிறது. அதுவும், ஓட்ஸை பலவிதமான உணவுகளாக தயார் செய்து அழகாக சாப்பிடலாம்.என்ன சொல்லும்போதே நாக்கில் ஊறுகிறதா? ரெசிப்பிகள் ரெடி! ``பத்து விதமான ஓட்ஸ் உணவுகள் தயார் . ஓட்ஸ்ன்னாவே ஏதோ நோயாளிகள்,டயாபடீஸ் பேஷண்டுகள் சாப்பிடுறதுன்னு சிலர் நெனைச்சுக்கிட்டுருக்காங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்புடுற ஹெல்த் ஃபுட். பேச்சுலர்கள் கூட ஈஸியா தெரிஞ்சுக்கிட்டு வீட்டுல செஞ்சு சாப்பிடலாம். இதோ... ---------------------------------------------------------------------------------- ஓட்ஸ் கேசரி தேவையான பொருட்கள் ஓட்ஸ்-100 கிராம், சுகர்-50 கிராம், ஏலக்காய்-2, நெய்-1 டீஸ்பூன், கேசரி பவுடர்-1 பின்ச், கொஞ்சம் முந்திரியும் திராட்சையும். செய்முறை ஓட்ஸை சாதாரண தண்ணீரில் ஓர் ஐந்து நிமிடம் ஊறவைத்து வடிகட்டியால் வடிகட்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்வது ஓட்ஸ் கேசரிக்கு மட்டுமல்ல,செய்யப்போகும் பத்துவிதமான ஓட்ஸ் உணவுக்குமே இதே போன்ற வழிமுறையைக் கடைப்பிடித்துக் கொள்ளவும். ஏனெனில், ஊறவைப்பதால் ஓட்ஸ் அழகாக சாஃப்ட்டாக இருக்கும். ஓட்ஸோடு சுகரையும் ஃபுட்கலரையும் சேர்த்து கடாயில் போட்டு வதக்க வேண்டும். கொஞ்சம் திக் ஆகி வரும்போது நெய், திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றைத் தூவி இறக்கி விட்டால் போதும் அட... அட... சூடான ஓட்ஸ் கேசரி ரெடி! -------------------------------------------------------------------------- ஓட்ஸ் பாயசம் தேவையான பொருட்கள் தண்ணீர் - 2 டம்ளர், ஓட்ஸ் - கைப்பிடி அளவு, பால் - 1/2 கப், முந்திரி+திராட்சை - 10கிராம், நெய் - 1 டீஸ்பூன், சுகர் - 30 கிராம் (டயாபடீஸ்காரராக இருந்தால் சுகருக்கு பதில் சுகர்ஃப்ரீ) செய்முறை ஓட்ஸை தண்ணீருடன் கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு சுகரை பாலில் சேர்த்து ஆறவைத்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரியையும் திராட்சையையும் வறுத்துவிட்டு ஆறவைத்திருக்கும் ஓட்ஸ் பால் கலவையோடு சேர்த்துவிட்டால்... அப்புறமென்ன ஓட்ஸ் பாயசம்தான். --------------------------------------------------------------- ஓட்ஸ் ஃப்ரைடு ரைஸ் தேவையான பொருட்கள்: ஓட்ஸ்-100 கிராம், கேரட்-1, கேப்சிகம் (குடைமிளகாய்)-1, வெங்காயம்-1, மிளகு- 1/2 டீஸ்பூன செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கட் பண்ணிய வெங்காயம்,கேரட், குடைமிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்க வேண்டும். பிறகு அதோடு மிளகு, உப்பு இரண்டையும் சேர்த்து ஓட்ஸைக் கொட்டிக் கிளறி இறக்கி விடவேண்டும்.சிறிதளவு அஜினோமோட்டோவைக் கலந்து கொள்ளலாம். (உடலுக்குக் கேடு என்று நினைத்தால் தவிர்த்து விடுங்கள்) ஓட்ஸ் ஃப்ரைடு ரைஸ் ஆரோக்கியமாக இருக்கும். ----------------------------------------------------------- ஓட்ஸ் உருண்டை தேவையான பொருட்கள்: ஓட்ஸ்-100 கிராம், வெங்காயம்-1/2, பச்சை மிளகாய்-1, கடுகு-1/4 டீஸ்பூன், கருவேப்பிலை-10, பெருங்காயத்தூள்-1/2 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு, எண்ணெய்-1 டீஸ்பூன். செய்முறை: எண்ணெயில் கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கிவிட்டு உப்பை சேர்க்கவும். அதோடு ஊறவைத்த ஓட்ஸை மிக்ஸ் பண்ணி உருண்டையாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதை இட்லி குக்கரில் (சில நிமிடங்கள்) வைத்து எடுத்தால் பார்ப்பதற்கு லட்டு மாதிரி இருக்கும் ஓட்ஸ் உருண்டை சுடச் சுட. ------------------------------------------------------------ ஓட்ஸ் புட்டு தேவையான பொருட்கள்: ஓட்ஸ்-100 கிராம், தேங்காய்-4 பீஸ், சுகர்-50 கிராம், ஏலக்காய்-3 செய்முறை: ஏலக்காயை நுணுக்கி பொடி செய்து கொள்ளவும். இதனுடன் ஓட்ஸ், துருவிய தேங்காயைச் சேர்த்து மூன்றையும் இட்லி குக்கரில் ஒரு வேக்காடு போட்டு இறக்கி அதோடு சர்க்கரையைத் தூவி ஓட்ஸ் புட்டை பிடாமல் சாப்பிடலாம். ------------------------------------------------------------------ ஓட்ஸ் பகாலாபாத். தேவையான பொருட்கள்: ஓட்ஸ்-100 கிராம், தயிர்-100 கிராம், உப்பு-தேவையான அளவு, கடுகு-1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை-5, பெருங்காயத்தூள்-1/4 டீஸ்பூன், இஞ்சி-1/2 கிராம், பச்சை மிளகாய்-2, எண்ணெய்-1 டீஸ்பூன். செய்முறை: எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை வதக்கிய பிறகு இஞ்சியையும் பெருங்காயத்தூளையும் மிக்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும். இதில் தயிரைக் கலந்து உப்பையும் மிக்ஸ் பண்ணிவிட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து ஓட்ஸை மிக்ஸ் பண்ணிவிட்டால் ஓட்ஸ் பகாலாபாத். --------------------------------------------------------------------- ஓட்ஸ் லெமன் தேவையான பொருட்கள்: ஓட்ஸ்-100கிராம், லெமன்-1/2, கடுகு-1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை-5, பச்சைமிளகாய்-2, உப்பு-தேவையான அளவு, எண்ணெய்-1 டீஸ்பூன், பெருங்காயத்தூள்-1/4 டீஸ்பூன், மஞ்சள்-1/4 டீஸ்பூன். செய்முறை: கடுகையும், கறிவேப்பிலையையும் எண்ணெயில் தாளித்துவிட்டு நறுக்கப்பட்ட பச்சை மிளகாயைப் போட வேண்டும். பிறகு லெமனைப் பிழிந்து உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ஆகியவற்றைக் கலந்து ஆற வைக்க வேண்டும். பிறகு ஓட்ஸை பாலோடு மிக்ஸ் பண்ணினால் ஓட்ஸ் லெமன் தயாராகிவிடும்.லெமனுக்குப் பதிலாக புளி கலந்தால் ஓட்ஸ் புளியோதரை, தக்காளி கலந்தால் ஓட்ஸ் தக்காளி என்று விதவிதமாகச் செய்து சாப்பிடலாம். ---------------------------------------------------------------------- ஓட்ஸ் உப்புமா தேவையான பொருட்கள்: ஓட்ஸ்-100 கிராம், வெங்காயம்-2, கடுகு-1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய்-2, எண்ணெய்-2 டீஸ்பூன், கடலைப்பருப்பு-2 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை ரொம்ப சிம்பிள். எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக வதக்கிவிட்டு ஓட்ஸைச் சேர்த்துவிட்டால் உடனடி ஓட்ஸ் உப்புமா ரெடி. ------------------------------------------------------------- ஓட்ஸ் கிரேவி தேவையான பொருட்கள்: ஓட்ஸ் - 100 கிராம், தக்காளி - 2, வெங்காயம் - 2, அரைத்த இஞ்சி + பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மஞ்சள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், கர மசாலா - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், தக்காளியை எண்ணெயில் போட்டு வதக்கிவிட்டு மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதை ஓட்ஸோடு மிக்ஸ் பண்ணிக் கொண்டு மஞ்சள், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலா, ஆகியவற்றைக் கலந்து விடவும். அதோடு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வரை ஸ்லோவாக கொதிக்க வைத்து புதினா கொத்துமல்லி, கறிவேப்பிலையைத் தூவிவிட்டால் மணக்க மணக்க ஓட்ஸ் கிரேவி. -------------------------------------------------------------------- ஓட்ஸ் பிஸ்கெட் தேவையான பொருட்கள்: இதில் மட்டும் ஊற வைக்கப்படாத ஓட்ஸ்-100கிராம், மைதா-50 கிராம், பட்டர் -75 கிராம், சுகர் -75 கிராம், பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன், முழு ஓட்ஸ்-25 கிராம், எசன்ஸ்-1/2 செய்முறை: ஊறவைக்கப்படாத ஓட்ஸையும், சர்க்கரையையும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ள வேண்டும். கலந்து வைக்கப்-பட்ட பேக்கிங் பவுடரையும், மைதாவையும் இதோடு மிக்ஸ் பண்ணினால் பூரி மாதிரி ஒரு தோற்றம் கிடைக்கும்.இதனுடன் எசன்ஸை கலந்துவிட்டு பூரி செய்யும் கட்டையால் (2 இஞ்ச் திக்னஸ்) பிஸ்கட் அளவிற்கு கட் பண்ணி எடுத்து அதன் மேல் முழு ஓட்ஸை தூவினால் சூப்பரான ஓட்ஸ் பிஸ்கெட் டேஸ்டோடு ரெடி.

Related

30 நாள் 30 வகை சமையல் 7387638975805511400

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item