மலேசியா சமையல்! சயூர்ஜெமெய்ஸ்
சயூர்ஜெமெய்ஸ் தேவையானவை: முட்டைகோஸ் - கால் கிலோ, குடமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 5, மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_9433.html
சயூர்ஜெமெய்ஸ்
தேவையானவை: முட்டைகோஸ் - கால் கிலோ, குடமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 5, மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், சோயா சாஸ் - 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, சர்க்கரை - அரை டீஸ்பூன். தாளிக்க: பட்டை - 2 துண்டு, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கோஸையும் குடமிளகாயையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லியதாக, நீளமாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஒன்றிரண்டாக நசுக்கிப் போட்டு, வெங்காயம், மிளகாய் சேருங்கள். இது சற்று வதங்கியதும், கோஸ், குடமிளகாய், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, ஒன்றரை கப் தண்ணீர் சேருங்கள். அத்துடன் உப்பும் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, தேங்காய்ப்பால், சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து, மேலும் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேருங்கள்.
மலேசியாவில் இடியாப்பத்துடன் பரிமாறப்படும் சைட்-டிஷ் இது.
Post a Comment