சமையல் குறிப்புகள்! உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல் தேவையானப்பொருட்கள்: உருளைக்கிழங்கு - 2 மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் எண்ணை - 2 டீஸ்பூன் உப்பு -...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_690.html
உருளைக்கிழங்கு மிளகு சீரக வறுவல்
தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
உருளைக்கிழங்கை, தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து எடுக்கவும். (மைக்ரோ அவனிலும் 3 முதல் 4 நிமிடங்கள் வரை வேக வைக்கலாம்).
மிளகு, சீரகம் இரண்டையும் சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு, அத்துடன் மிளகு, சீரகப் பொடி, உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கு மொரமொரப்பாகும் வரை வறுத்தெடுக்கவும்.
Post a Comment