சமையல் குறிப்புகள்! முள்ளங்கி மோர்க் குழம்பு
முள்ளங்கி மோர்க் குழம்பு குழம்புக்குத் தேவையான பொருட்கள் : தேங்காய்த் துருவல், கடலைப் பருப்பு, வெந்தயம், சீரகம் (ஊற வைத்து அரைக்க)-தலா ½ டீ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_6489.html
முள்ளங்கி மோர்க் குழம்பு
குழம்புக்குத் தேவையான பொருட்கள் : தேங்காய்த் துருவல், கடலைப் பருப்பு, வெந்தயம், சீரகம் (ஊற வைத்து அரைக்க)-தலா ½ டீஸ்பூன், மஞ்சள் தூள்- ½ டீஸ்பூன், திக்கான தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய்- 2,- உப்பு தேவையான அளவு.
குழம்புக்கு:
ஊற வைத்தவற்றை அரைத்து அத்துடன் மீதி உள்ள பொருட்களைக் கலந்து கொள்ளவும்.
முள்ளங்கி உருண்டை செய்ய:
முள்ளங்கித் துருவல்¼ கப், பச்சைப் பருப்பு (ஊற வைத்தது)-¼ கப், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது-½ டீஸ்பூன், கடலை மாவு-3 டீஸ்பூன்
செய்முறை : ஊற வைத்த பச்சைப் பருப்பைத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். முள்ளங்கித் துருவலுடன் உப்பு சேர்த்து ஈரத் தன்மை போக 2 (அ) 3 முறை பிழிந்து எடுக்கவும். அரைத்த பச்சைப் பருப்பை இந்த முள்ளங்கித் துருவலுடன் சேர்த்து கறிவேப்பிலை, உப்பு, கடலை மாவு சேர்த்து திக்கான உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். பிறகு, இந்த உருண்டைகளை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
உருண்டைகள் வெந்ததும் அதைத் தனியே எடுத்துவிட்டு அந்தத் தண்ணீரில் முன்பே செய்து வைத்த குழம்புக் கலவையை சேர்த்து, 2 நிமிடங்கள் சூடாக்கவும். கலவை பொங்கி வந்தவுடன் ஆஃப் செய்துவிடவும். பிறகு தனியா எடுத்து வைத்த முள்ளங்கி உருண்டைகளை இதில் போட்டு, கடுகு, சீரகம், தாளித்துப் போட்டு 2 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து அதன் பிறகு குழம்பை இறக்கவும்!
Post a Comment