சமையல் குறிப்புகள்! முள்ளங்கி சட்னி
முள்ளங்கி சட்னி தேவையான பொருட்கள் வெள்ளை முள்ளங்கி துண்டுகள் - 1 கப் வர மிளகாய் - 12 சின்ன வெங்காயம் - 12 துருவிய தேங்காய் - 1 /4...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_6070.html
முள்ளங்கி சட்னி
தேவையான பொருட்கள்
வெள்ளை முள்ளங்கி துண்டுகள் - 1 கப்
வர மிளகாய் - 12
சின்ன வெங்காயம் - 12
துருவிய தேங்காய் - 1 /4 கப்
பூண்டு - 2 பல்
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
கடுகு - 1 /2 தேக்கரண்டி
செய்முறை
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி முள்ளங்கி, வரமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
கடைசியாக தேங்காய் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் பூண்டு, பெருங்காயத்தூள், புளி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
கடுகு தாளித்து சட்னியில் கொட்டவும்.
அதே கடாயில் காரட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
வதக்கிய பொருட்களுடன் துருவிய தேங்காய், பூண்டு , வறுத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, சட்னியில் கொட்டவும்.
Post a Comment