சமையல் குறிப்புகள்! சோயா கோப்தா
சோயா கோப்தா தேவையான பொருட்கள் : சோயா சங்க்ஸ் ஊற வைத்தது, பீன்ஸ், கேரட், காலிஃபிளவர், சேர்த்து கலந்த காய்கறிகள்-தலா ¼ கப், உருளைக்கிழங்கு ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_3726.html
சோயா கோப்தா
தேவையான பொருட்கள் : சோயா சங்க்ஸ் ஊற வைத்தது, பீன்ஸ், கேரட், காலிஃபிளவர், சேர்த்து கலந்த காய்கறிகள்-தலா ¼ கப், உருளைக்கிழங்கு வேக வைத்தது-ஒரு கப், இஞ்சி, கிரீன் சில்லி பேஸ்ட், தூவுவதற்கு மல்லித் தழை, எண்ணெய்-ஒரு டீஸ்பூன், கரம் மசாலா-½ டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு, ஒரு டீஸ்பூன் கார்ன் ஃபிளவர் மாவு, (அ) பிரட் தூள் (அ) ரஸ்க் தூள் சிறிதளவு (கோப்தாவை புரட்ட)
செய்முறை : தேவையான எல்லாப் பொருள்களையும் உப்பு சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். இந்த உருண்டைகளைப் பிரட் தூளின் மீது லேசாகப் புரட்டி எடுங்கள். அப்போதுதான் கோப்தா கிரிஸ்பியாக இருக்கும். இந்த கோப்தாவின்மீது எண்ணெய்யைத் தடவி தவாவில் பரத்தி, குறைந்த தீயில் நன்கு சிவக்கும் வரை புரட்டிப் போட வேண்டும்.
ஸ்பெஷல் : ஜீரோ கொலஸ்ட்ரால், ரிச் புரோட்டீன் இரண்டும் சேர்ந்த டிஷ் இது.
Post a Comment