சமையல் குறிப்புகள்! மட்டன் ஷாய் குருமா
மட்டன் ஷாய் குருமா தேவையான பொருட்கள் எலும்பு நீக்கிய மட்டன் - 1/2 கிலோ வெங்காயம் - 200 கிராம் தேங்காய் - 1/2 மூடி கிரீம் - 4 டீஸ்பூன் கசக...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_3102.html
மட்டன் ஷாய் குருமா
தேவையான பொருட்கள்
எலும்பு நீக்கிய மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் - 1/2 மூடி
கிரீம் - 4 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
தயிர் - ஒரு குழிக்கரண்டி
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
வெள்ளை மிளகு - 2 டீஸ்பூன்
பட்டை லவங்கம் - தலா 2
செய்முறை
* மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
* தயிரையும் சேர்த்து வதக்கி தனியாத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், பொடித்த வெள்ளை மிளகு சேர்க்கவும்.
* இப்போது மட்டனை சேர்த்து நன்கு வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* அரைத்த முந்திரி விழுதைச் சேர்த்துக் கொள்ளவும். கிரீம் சேர்த்துக் கிளறி சில நிமிடங்களில் இறக்கி பரிமாறவும்.
Post a Comment