பலப்பழ சாட்`
பலப்பழ சாட்` தயாரித்து சுவைப்போமா? தேவையான பொருட்கள் கனிந்த வாழைப்பழம் - 2 ஆப்பிள் - 1 பப்பாளிப் பழத்துண்டு - 8 மாம்பழ துண்டுகள் - 8 ஆரஞ்...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_28.html
பலப்பழ சாட்` தயாரித்து சுவைப்போமா?
தேவையான பொருட்கள்
கனிந்த வாழைப்பழம் - 2
ஆப்பிள் - 1
பப்பாளிப் பழத்துண்டு - 8
மாம்பழ துண்டுகள் - 8
ஆரஞ்சு சுளைகள் - 4
கறுப்பு திராட்சை - 8
பச்சை திராட்சை (விதையற்றது) - 12
மாதுளம்பழ பற்கள் - 2 டேபிள் ஸ்பூன்
அன்னாசிப்பழ துண்டுகள் - 8
எலுமிச்சம் பழம் - 1
சாட் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
கறுப்பு உப்பு - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை
* வாயகன்ற பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து அதில் பழத்துண்டுகளைப் போட்டு, தட்டையான ஒரு மரக்கரண்டியால் மெல்ல கலந்து விடவும்.
* பழத்துண்டுகளின் கலவை மேல் `சாட்' மசாலாத்தூள், கறுப்பு உப்பு, சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், உப்பு தூவி, மரக்கரண்டியால் மெல்லக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு:
* கறுப்பு உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் ரெடி
* மேடாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.
* சீரகத்தை மெல்லிய தீயில் வெறும் வாணலியில் நன்கு வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்து சீரகத்தூள் தயாரிக்கலாம்.
* தட்டையான மரக்கரண்டி உபயோகித்து `பலப்பழ சாட்'டை மெல்லக் கலப்பதானது, பழத்துண்டுகள் உடையாமல் இருக்க உதவும்.
பழங்களில்...
* வெயில் காலத்தில் முலாம்பழம், கிர்னிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
* காலையில் 4 பேரீச்சை பழம், கிஸ்மிஸ் பழம் - 4, ஒரு கரண்டி கசகசா இவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டி குடிக்கலாம். தித்திப்பு தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். வெயிலுக்கு மிகவும் நல்லது.
* வெள்ளரிக்காயை துருவி அதில் மிளகுத்தூள், ஏலக்காய் பொடி சேர்த்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பை தடுக்கும்.
* தர்பூசணி பழமும் வெயிலுக்கு நல்லது. ஆனால் நிறைய சாப்பிடுவது சிறுநீரக பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
* வெள்ளைப் பூசணியை சாலட் செய்து சாப்பிடலாம். கொஞ்சம் கேரட், வெள்ளரிக்காய், வெள்ளைமிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட் செய்யவும்.
* வெயில் காலத்தில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து, மசாலா பொருட்களை குறைத்துக் கொள்ளவும்.
----------------------------------------------------------------------
Post a Comment