மலேசியா சமையல்! புலூர் ரைஸ்
புலூர் ரைஸ் இந்த அரிசி வெண்ணெய் நிறத்தில், வழுவழுவென்று இருக்கும். வேகவைத்தால் கொஞ்சம் பிசுபிசுப்புடன் இருக்கும். நம் நாட்டில் நீல்கிரீஸ் ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_2269.html
புலூர் ரைஸ்
இந்த அரிசி வெண்ணெய் நிறத்தில், வழுவழுவென்று இருக்கும். வேகவைத்தால் கொஞ்சம் பிசுபிசுப்புடன் இருக்கும். நம் நாட்டில் நீல்கிரீஸ் போன்ற பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் இந்த அரிசி கிடைக்கிறது. ‘வெள்ளை கவுனி அரிசி’ எனக் கேட்டு வாங்கலாம். கிடைக்காதவர்கள் ‘கறுப்பு கவுனி அரிசி’ வாங்கி உபயோகிக்கலாம்.
தேவையானவை: புலூர் ரைஸ் - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், வெல்லம் - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: அரிசியை 2 முதல் 3 மணி நேரத்துக்கு ஊறவையுங்கள். ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்துவிட்டு, இட்லித்தட்டில் பரவலாக வைத்து, இட்லிப் பாத்திரத்தில் வேக வையுங்கள். உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, அவ்வப்போது மூடியைத் திறந்து, அரிசி மேல் கிளறி விட்டு தெளியுங்கள். நன்கு வெந்த தும் (அமுக்கினால் பிசுக்கென்று அமுங்கும்) இறக்குங்கள்.
வெல்லத்தை ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறி கரைந்ததும் வடிகட்டி, தேங்காய் துருவல் சேர்த்து, மீண்டும் கிளறுங்கள். வெந்து இறக்கிய புலூர் அரிசி மீது, இந்த வெல்லத் தேங்காய் கலவையை பரவினாற் போல வைத்துப் பரிமாறுங்கள்.
மலேசியர்களின் ஃபேவரிட் இந்த இனிப்பு.
Post a Comment