கைமணம் ! மொச்சைக் கொட்டை கருவாட்டுக் குழம்பு
மொச்சைக் கொட்டை கருவாட்டுக் குழம்பு தேவையான பொருட்கள் மொச்சைப்பயிறு - 1 கையளவு கருவாடு - சிறிதளவு கத்தரிக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 2...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_21.html
மொச்சைக் கொட்டை கருவாட்டுக் குழம்பு
தேவையான பொருட்கள்
மொச்சைப்பயிறு - 1 கையளவு
கருவாடு - சிறிதளவு
கத்தரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
கறிவேப்பிலை - 2 கொத்து
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
புளி - எலுமிச்சம் பழ அளவு
கடுகு - சிறிதளவு
செய்முறை
* மொச்சைப் பயிறை வேக வைத்துக் கொள்ளவும்.
* கருவாட்டை மண் போக நன்கு அலசிக் கொள்ளவும்.
* கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கவும்.
* இப்போது தனியாத்தூள், மஞ்சள்தூள், அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றவும். கத்தரிக்காய் சேர்த்து வேக வைக்கவும்.
* காய் வெந்ததும், புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் வேக வைத்த மொச்சைக்கொட்டை, கருவாடு இவற்றை சேர்க்கவும்.
* உப்பை சரி பார்த்து குழம்பு கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.
* இப்போது மணக்க மணக்க மொச்சைக் கொட்டை கருவாட்டுக் குழம்பு ரெடி.
--------------------------------------------------------------------------------
Post a Comment