கைமணம்! அட்டகாசமான சுவையில் பேரீச்சம்பழக் குழம்பு
பேரீச்சம்பழக் குழம்பு தேவையானவை: கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 10, உரித்த சின்ன வெங்காயம் - அரை கப், பூண்டு - 4 பல், தக்காளி - 2, கடுகு, ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_18.html
பேரீச்சம்பழக் குழம்பு
தேவையானவை: கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 10, உரித்த சின்ன வெங்காயம் - அரை கப், பூண்டு - 4 பல், தக்காளி - 2, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் - அரை கப், முந்திரிப்பருப்பு - 5, பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்தூள் - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேரீச்சம்பழத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். புளியை கெட்டியாக, ஒன்றரை கப் வருமாறு கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். புளிக்கரைசலை விட்டு, அரைத்த பேரீச்சை விழுது, தேங்காய் விழுது சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தளதளவென கொதித்ததும், கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கவும்.
இது புளிப்பும், தித்திப்புமாக அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Post a Comment