அசத்தல் சுவையில் பகோரா மிர்ச்சி பாஜியா!
தேவையானவை: பெரிய பஜ்ஜி மிளகாய் - 15, பனீர் - முக்கால் கப், பெரிய வெங்காயம் - 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, மிளகுப்பொடி - அரை டீஸ்பூன், ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_1462.html
தேவையானவை: பெரிய பஜ்ஜி மிளகாய் - 15, பனீர் - முக்கால் கப், பெரிய வெங்காயம் - 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, மிளகுப்பொடி - அரை டீஸ்பூன், மாங்காய் பொடி - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் (பொடியாக அரிந்தது) - ஒரு டீஸ்பூன், கடலைமாவு - ஒன்றரை கப், தண்ணீர் - ஒன்றரை கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, துருவிய சீஸ் (அலங்கரிக்க) - சிறிதளவு.
‘டொமேடோ சாஸ்’ செய்ய: தக்காளி - முக்கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 6, பெரிய வெங்காயம் - 1, உப்பு - தேவையான அளவு, சர்க்கரை - 2 டீஸ்பூன், ஓமம் - ஒரு டீஸ்பூன். ‘கிரீன் சாஸ்’ செய்ய: பச்சை மிளகாய் - 4, பச்சை தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 1, வினிகர் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடலைமாவு, உப்பு, பேக்கிங் பவுடர் எல்லாவற்றையும் கட்டியில்லாமல் கலந்து, நீர் விட்டு பஜ்ஜிமாவு பக்குவத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பனீரைத் துருவவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பனீர், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மிளகுப்பொடி, மாங்காய் பொடி கலந்து பிசையவும். மிளகாயை கீறி விதைகளை எடுத்துவிட்டு, அதில் இந்த பனீர் பூரணத்தை அடைத்து கடலைமாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
‘டொமேடோ சாஸ்’ செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். நறுக்கிய தக்காளி, வெங்காயம் இரண்டையும் சிறிது எண்ணெயில் வதக்கி சர்க்கரை, உப்பு சேர்க்கவும். பிறகு, ஓமம், காய்ந்த மிளகாய் இரண்டையும் நைஸாக பொடித்து அதில் சேர்த்து, சிறிது நீர் விட்டு 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும். இதுதான் டொமேடோ சாஸ்.
‘கிரீன் சாஸ்’ செய்முறை: பச்சை தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி சிறிது நீர் விட்டு, நன்றாக கொதித்தபின் உப்பு, வினிகர் கலந்து வைக்கவும். இது ‘கிரீன் சாஸ்’. கடைசியாக டொமேடோ சாஸ், கிரீன் சாஸ், இவற்றுடன் பாஜியாவை சீஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Post a Comment