சமையல் குறிப்புகள்!
சிக்கன் மஞ்சூரியன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மைதாமாவு - 2 கையளவு சோளமாவு - ஒரு கையளவு வெங்காயத்தாள், வெங்காயம் - 100 கிராம் இஞ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_1393.html
சிக்கன் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
மைதாமாவு - 2 கையளவு
சோளமாவு - ஒரு கையளவு
வெங்காயத்தாள், வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
முட்டை - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 பழம் பிழிந்தது
உப்பு - தேவையான அளவு
எண்ணை - பொரிப்பதற்கு
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
சிவப்பு கலர் பவுடர் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
* மைதாமாவு, சோளமாவு, சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை, அஜினோமோட்டோ, முட்டை, போதுமான அளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சுத்தம் செய்த சிக்கனை, மாவில் தோய்த்து எண்ணையில் போடவும். இருபுறமும் வெந்த பிறகு எடுத்து தனியே வைக்கவும்.
* அடிகனமான மற்றொரு வாணலியை எடுத்து சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், வெங்காயத் தாள், பூண்டு இஞ்சி விழுது, பச்சைமிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
* பொரித்த சிக்கனைச் சேர்த்து உப்பு சரி பார்த்து கலர் சேர்த்துக் கிளறி சிறிது நேரத்தில் இறக்கவும்.
Post a Comment