சுவையான பொரித்த குழம்பு!
பொரித்த குழம்பு! காரட் துண்டுகள் (1/2’’) - 2 கப், சின்னவெங்காயம் - 1 கப், பூண்டு - 10, 12, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், வேக வைத்த பயத்தம் பரு...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_1084.html
பொரித்த குழம்பு!
காரட் துண்டுகள் (1/2’’) - 2 கப்,
சின்னவெங்காயம் - 1 கப்,
பூண்டு - 10, 12,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
வேக வைத்த பயத்தம் பருப்பு - 3/4 கப்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு, மஞ்சள் பொடி.
வறுத்துப் பொடி செய்ய : 1/2 டீஸ்பூன் எண்ணெய், மிளகாய் வற்றல் 5-6, மிளகு - 1 டீஸ்பூன், துவரம் பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், அரிசி - 1 டீஸ்பூன், தாளிக்க -
கடுகு - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை.
இரண்டு கப் சுடுநீரில் தேங்காயை அரைத்துப் பால் எடுக்கவும். பிரஷர்பானில் எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், பூண்டு, காரட் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி போட்டு மூடி ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். தேங்காய்ப் பாலில் வறுத்த பொடியையும், வேகவைத்த பருப்பையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். வேகவைத்த காரட் கலவையுடன் இதைச் சேர்த்து இன்னும் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். இறக்கித் தாளிக்கவும். சாதத்துடன் சாப்பிட சுவையான பொரித்த குழம்பு!
Post a Comment