ரசிக்க.. ருசிக்க! தாளகக் குழம்பு
தாளகக் குழம்பு தேவையான பொருள்கள்: அவரைக்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், தடியங்காய், பரங்கி, பூசணி, கத்திரி, புடலை, சேனை, முருங்கை, வாழை, கார...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_10.html
தாளகக் குழம்பு
தேவையான பொருள்கள்:
அவரைக்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், தடியங்காய், பரங்கி, பூசணி, கத்திரி, புடலை, சேனை, முருங்கை, வாழை, காராமணிக் காய், உருளைக் கிழங்கு..
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - தேங்காயெண்னை, கடுகு, கறிவேப்பிலை
மசாலா அரைக்க:
தேங்காய்த் துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லி விதை - 2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
மேலே கூறியுள்ள காய்களில் குறைந்தது ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட வகைக் காய்களை உபயோகிக்கலாம்.
காய்களைக் கழுவி, 2 இன்ச் நீளத் துண்டுகளாக வெட்டி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
மசாலா சாமான்களை நெய்யில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, வெந்த காயில் கொட்டிக் கொதிக்கவிடவும்.
புளி வாசனை அடங்கியதும் அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து சிறு தீயில் அடிப் பிடிக்காமல் குழம்பு, கூட்டு போல் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
தேங்காய் எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்
Post a Comment