சமையல் குறிப்புகள்! மசாலா இடியாப்பம்
மசாலா இடியாப்பம் தேவையான பொருட்கள் : இடியாப்பம் உதிர்த்தது - 2 கப் முட்டை - 3 சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 3 பூடு - 6 பல் மிளகாய்தூள் -...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_08.html
மசாலா இடியாப்பம்
தேவையான பொருட்கள் :
இடியாப்பம் உதிர்த்தது - 2 கப்
முட்டை - 3
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
பூடு - 6 பல்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய், மல்லி இலை - தேவைக்கேற்ப.
அரைக்க : தக்காளி, வெங்காயம், பூடு, மிளகாய்த்தூள், கரம் மசாலாதூள்.
செய்முறை :
அரைக்க கொடுத்தவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து அடித்து கடாயில் எண்ணெய் ஊற்றி வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்கவும். எண்ணைப் பிரிந்து வரும் போது உதிர்ந்த இடியாப்பம் முட்டை கலவையைப் போட்டு கிளறி மல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான மசாலா இடியாப்பம் தயார். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு.
Post a Comment