சமையல் குறிப்புகள்! இறால் கறிவேப்பிலைத் தொக்கு
இறால் கறிவேப்பிலைத் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ கறிவேப்பிலை - 2 கொத்து (வறுத்து பொடி செய்யவும்) வெங்காயம் - 200 கிராம் தக்கா...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_07.html
இறால் கறிவேப்பிலைத் தொக்கு
தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
கறிவேப்பிலை - 2 கொத்து (வறுத்து பொடி செய்யவும்)
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உ�பு - தேவையான அளவு
எ�ணை - 1 குழிக்கரண்டி
செய் முறை
* இறாலை குடல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும்.
* இ�போது பொடி செய்த கறிவேப்பிலை சேர்த்து, போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.
* தொடர்ந்து சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து போதுமான அளவு நீர் ஊற்றி வேக விடவும்.
* இறாலுடன் மசாலா சேர்ந்து தொக்காக வந்தவுடன் இறக்கி விடவும்.
* தேவையெனில் தொக்கை இறக்கும்பொழுது 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு விடலாம்.
* இந்தத் தொக்கு சாதத்திற்கும், டிபன் வகையறாக்களுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
Post a Comment